அந்த படத்துல வாங்குன அடி... ஒல்லி நடிகர் தயாரிப்பு பக்கமே திரும்பாம இருக்குறதுக்கு காரணம் அதானாம்!

By Staff

சென்னை: ஒல்லி நடிகர் தயாரிப்பு பக்கமே திரும்பாம இருப்பதற்கு காரணம் அந்தப் படத்தில் வாங்கியது அடிதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அந்த ஒல்லி நடிகர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிஸியாக உள்ளார்.

நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர், தனது ஒவ்வொரு படத்துக்கும் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

பெத்த பட்ஜெட் படங்கள்

பெத்த பட்ஜெட் படங்கள்

இதன் மூலம் கட்டும் கல்லா பத்தவில்லை என தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் நடிகர். ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து பெத்த வருமானத்தை பார்த்த நடிகர், பெரும் பட்ஜெட் படங்களை தயாரிக்கும் பணியில் குதித்தார்.

சில கோடி வருமானம்

சில கோடி வருமானம்

இதனால் தனது மாமனாரை வைத்தே படத்தை தயாரித்தார் ஒல்லி நடிகர். பல கோடிகள் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட அந்தப் படம் சில கோடிகளை மட்டுமே வசூலித்து. இதனால் தலையில் துண்டை போடும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஒல்லி நடிகர்.

கடன் பிரச்சனையால் அதள பாதாளத்தில்..

கடன் பிரச்சனையால் அதள பாதாளத்தில்..

இத்தனைக்கும் மருமகன் படும் கஷ்டத்தை உணர்ந்த மாமனார் நடிகர், தான் நடித்த படத்திற்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லையாம். ஆனாலும் அந்தப் படத்தால் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் அதளபாதாளத்தில் விழுந்து விட்டாரம் நடிகர்.

விட்டதை பிடிக்க.. மீண்டும் தயாரிப்பு?

விட்டதை பிடிக்க.. மீண்டும் தயாரிப்பு?

அதன் பிறகுதான் நமக்கும் தயாரிப்புக்கம் ஒத்து வராது என ஒதுங்கி விட்டார் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். நடிகரின் முடிவால் சிறு பட்ஜெட் கதைகளை வைத்திருந்த இயக்குநர்கள் ஃபீலாயினர். தற்போது அடுத்தடுத்து பல படங்களில நடித்து வரும் ஒல்லி நடிகர், மீண்டும் விட்டதை பிடிக்க தயாரிப்பில் குதிக்கவுள்ளார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

குழப்பத்தில் உள்ள நடிகர்

குழப்பத்தில் உள்ள நடிகர்

மீண்டும் அகலக் கால் வைக்காமல் வசூலை குவிக்கும் சிறு பட்ஜெட் படங்களில் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் தனக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக பேசி வருகிறாராம் ஒல்லி நடிகர். ஆனால் குடும்பத்தினர் கூறும் அட்வைஸால் கொஞ்ச நாளைக்கு நடிப்பிலேயே கவனம் செலுத்தலாமா என குழப்பத்தில் உள்ளாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X