பாலிடிக்ஸ் ரூட் எடுத்த நடிகர்.. அந்த நடிகருக்கு பொருளைக் கொடுக்க காரணமே வேறயாம்.. அது தெரியாம..

By Staff

சென்னை: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருக்கும் அவர் தற்போது சீரியஸ் பாலிடிக்ஸில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து கொண்டு திடீரென அரசியலில் அவர் களமிறங்கியது குறித்து யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. காரணம், அரசியலில் அவர் காலடி எடுத்து வைப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது ரசிகர் மன்றத்தை வைத்த பல வேலைகளைச் செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் தனது ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே தனது கட்சியை ஆன்லைனில் அறிவித்துவிட்டு அடுத்த காட்சியை நடிக்கப் போய்விட்டார். கட்சி தொடங்கி சில ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தாலும் அவரால் தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா இல்லையா என்பது குறித்து அடுத்த ஆண்டு அதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் போதுதான் தெரியும்.

இப்படி இருக்கும்போது, கட்சியை அறிவித்த போது எந்த படத்தில் நடித்துக் கொண்டு இருந்தாரோ, அதே படத்தில் ஒரு காட்சியில் மற்றொரு நடிகருக்கு ஒரு பொருளைக் கொடுத்தது போல் நடித்தார். இந்த காட்சிக்கு இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் தியேட்டரில் கொண்டாடினார்கள். இந்த காட்சிக்கு பலரும் பலவிதமாக டீ-கோட் செய்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

Tamil cinema tamilnadu politics Gossip Actor who did specail scene another Actor for political reason

காரணம்: அதாவது அந்த நடிகருக்கு பின்னர் இந்த இளம் நடிகர்தான் தமிழ் சினிமாவில் அந்த இடத்திற்கு உயர்வார், அதற்கு அந்த நடிகரின் ரசிகர்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்று எல்லாம் கூறப்படுகிறது. ஆனால் இந்த நடிகர் அந்த படத்தில் இப்படியான காட்சிகளில் மட்டுமல்ல, பல நடிகர்களை உயர்த்திப் பேசும் பல காட்சிகளிலும் நடித்திருந்தார்.

இது தெரியாம: அதற்கு காரணம் எல்லாம் பாலிடிக்ஸில் அவர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடும் போது, இந்த சினிமா காட்சிகளை எல்லாம் போட்டுக் காட்டி பொது மக்களாக இருக்கும் ரசிகர்களுக்கு அவற்றை வாக்குகளாக மாற்ற திட்டமிட்டுள்ளாராம். இதனால் தான் அந்த காட்சிகளை எல்லாம் வைக்க ஒத்துக் கொண்டாராம். இது தெரியாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த நடிகருக்கு ஃபயர் விட்டுள்ளார்கள். அதுவும் குறிப்பாக பொருளை வாங்கிய நடிகரின் ரசிகர்கள் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டு ஷாக் ஆகி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X