பவர் நடிகரின் கரிசனத்துக்காக காவடி தூக்கும் காமெடி நடிகர்.. கண்டுகொள்ளவே இல்லைனு கவலையாம்

By Staff

சென்னை: இந்த காமெடி நடிகருக்கு சினிமாவில் மார்க்கெட் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பின்னர் சின்னத்திரையில் தலையைக் காட்டிக் கொண்டு இருந்தவர், திடீரென சமூகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்தார். இப்படி இருக்கையில் பவர் நடிகர் கட்சி தொடங்க, அந்த கட்சியில் ஓடிப் போய் தன்னை இணைத்துக் கொள்ளவும் செய்தார். ஆனால் காமெடி நடிகருக்கும் பவர் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி காமெடி நடிகரை மந்தையில் இருந்து பிரிந்து சென்ற ஆடாக மாற்றிவிட்டது.

அதாவது முதலில் இந்த காமெடி நடிகர் திரையுலகில் இருந்து கதாநாயகன் கட்சி ஆரம்பித்தாலும், கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது என்ற மாறாத கொள்கையை பின்பற்றி வருகிறவர். அப்படி ஒரு மூத்த நடிகர் கட்சி தொடங்கியதும் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் அந்த மூத்த நடிகர் ஆண்ட கட்சியுடன் தனது கட்சியை இணைக்கும் விழா நடத்தாமல் இணைத்துக் கொண்டதால், இந்த காமெடி நடிகரும் அந்த ஆண்ட கட்சியினருடன் நன்றாகவே பழகி வந்தார்.

இப்படி இருக்கையில், நடிகர் தன்னுடன் நடித்த நடிகர் கட்சி ஆரம்பித்ததும் தன்னை இணைத்துக் கொண்டார். நடிகருக்கு இருக்கும் மவுசுக்கு தேர்தலில் எம்.எல்.ஏ சீட் கிடைத்தால் கூட வென்று விடலாம், அதற்கு ஏற்ற அளவுக்கு மக்களுடன் களத்தில் கட்சிக்காரனாக நிற்க வேண்டும் என்று நினைத்து அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Tamil Comedy Actor Waiting for Power Star s Attention Again Political Shift Sparks Kollywood Buzz

மாறிய காட்சிகள்: ஆனால் இந்த காமெடி நடிகர் நினைத்தது போல நடக்கவில்லை, மாறாக நடிகரை நெருங்க வேண்டும் என்றால் முதலில் அவரைச் சுற்றில் உள்ள வட்டத்தைக் கடக்க வேண்டும், ஆனால் அந்த வட்டத்தை நிர்வகிப்பவர்கள் நடிகருடன் பல ஆண்டுகள் நெருங்கி பழகியவர்கள் மட்டும் இல்லாமல், உள்ளடி அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இதனால் பவர் நடிகருக்கு அருகில் காமெடி நடிகரால் நெருங்கவே முடியவில்லையாம். இப்படி இருக்கையில், ஒரு கட்டத்தில் முடிவெடுத்த காமெடி நடிகரோ பவர் நடிகரின் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியான முடிவை எடுத்தார்.

தமாசு: இந்த முடிவு எடுத்து ஒரு ஆண்டுக்குள்ளாக காட்சிகள் எல்லாம் மொத்தமாக மாறிவிட்டது. மேலும் காமெடி நடிகரும் மற்றொரு கட்சியில் இணைந்து கொண்டு வேலை செய்யத் தொடங்கிவிட்டார். தற்போது காட்சிகள் எல்லாம் மாறிவிட்டதால் பவர் நடிகரின் கரிசனத்துக்காக காத்துக் கொண்டு இருக்கிறாராம் இந்த காமெடி நடிகர். இந்த காமெடி நடிகரின் செயல்களைப் பார்த்த பலரும் ஒரே தமாசு என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X