கோடிகளைச் சுருட்ட பிளான் போட்ட முன்னாள் காதலி.. அடேங்கப்பா செம்மையா ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரபலம்
சென்னை: திரையுலகில் அவ்வப்போது பிரபலங்கள் குறித்து எழும் குற்றச்சாட்டுகள் பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் இருக்கிறது. அதுவும் அண்மையில் பாடகி ஒருவர் இசையமைப்பாளர் மீது சொன்ன பாலியல் குற்றச்சாட்டு பகீர் கிளப்பும் விசயமாக இருக்கிறது. இந்த பாடகி தனக்கு கொடுமை நடந்தபோதே இது தொடர்பாக பேச வேண்டியது தானே? ஆனால் இப்போது பேச என்ன காரணம்? என்று பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
பாடகி இப்படி குற்றம் சுமத்திய பின்னர் இனி இந்த பிரச்னை என் சொந்தப் பிரச்னை என பிரச்னையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தங்களால் திரட்ட முடிந்த தகவல்களைத் திரட்டி பலருக்கும் திடுக்கிடும் தகவல்களை வெளியே சொல்லி வருகிறார்கள்.
அதாவது அந்த இசையமைப்பாளரும் இந்த பாடகியும் நெருக்கமாக பழகி வந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்துவிட்டார்கள். காதலிக்கும் போது மிகவும் நெருக்கமாக இருந்த காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாடகி இன்னும் வைத்திருக்கிறார். மேலும் இருவரும் நெருங்கிப் பழகிய காலத்தில் இசையமைப்பாளர் ஒரு சாதாரண இசையமைப்பாளர் தான். அப்போது அவருக்கு சம்பளமே சில லட்சங்கள் தான் இருக்கும். ஆனால் தற்போது இசையமைப்பாளர் பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

பாடகி அந்த இசையமைப்பாளரைப் பிரிந்து வருவதற்கு பணமும் ஒரு காரணம் என்று சிலர் பேசுகிறார்கள். அதே நேரத்தில் தற்போது புகைச்சலை கிளப்பவும் காரணம் பணம் தான் என்றும் கூறுகிறார்கள். அதாவது தற்போது இசையமைப்பாளர் பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். அவருடன் நெருங்கிப் பழகும் போது சில லட்சங்களை அவருக்கு கொடுத்துள்ளோம், அந்த சில லட்சங்களை எல்லாம் அப்படியே சில கோடிகளாக வாங்கிவிட வேண்டும் என்று பிளான் போட்டு விட்டாராம் பாடகி. இப்படி இருக்கையில் தான் இதை எப்படி வெளியே சொல்வது என்று முடிவு செய்து அதற்கு ஒரு பிளான் போட்டு கொடுத்தாராம் பாடகிக்கு நெருங்கிய பிரபலம். இப்படி இருக்கையில் பாடகி பணத்தை எண்ணலாம் என்று ஆவலோடு இருகையில், பலர் அவருக்கு எதிராக கிளம்பியது, டரியல் ஆகி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications