சீரியல் நடிகையோடு இயக்குநர் அடிக்கும் கூத்து.. நடிகைக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பாம்!
சென்னை: இந்த சீரியல் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல், இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தும், அந்த சீரியலின் இயக்குநர் ஒரு கதாபாத்திரத்திற்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு அளித்து வருகிறாராம். இது குறித்த பேச்சு சின்னத்திரை வட்டாரத்தில் தற்போது காதும் காதும் வைத்தது போல பேசி வருகிறார்களாம்.
அதாவது இந்த கதாபாத்திரத்தை சுமார் 100 எபிசோட்களாகத் தான் காட்டி வருகிறார்கள். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அந்த சீரியலில் இயக்குநர் ஓவர் கவனிப்பு கொடுத்து வருகிறார். ஏற்கனவே இந்த சீரியலில் இந்த கதாபாத்திரத்தைப் போலவே வேறு ஒரு கதாபாத்திரம் இருந்தாலும், இந்த நடிகை நடிக்க வந்ததிலிருந்து, அந்த கதாபாத்திரத்தை மொத்தமாகவே கண்டு கொள்வதில்லையாம். கிட்டத்தட்ட ஏதோ செட் பிராப்பர்ட்டி போல பயன்படுத்தி வருகிறாராம்.
இப்போது இது பற்றிய பேச்சுக்கள் தான் அதிகம் பேசப்படுகிறதாம். இதனால் அப்செட் ஆன மற்ற கதாபாத்திரத்தை சேர்ந்தவர்கள் இயக்குநர் இவ்வாறு செய்ய என்ன காரணம் என யோசித்துள்ளார்கள். அதன் பின்னர்தான் தெரியவந்துள்ளது, இயக்குநருக்கும் இந்த நடிகைக்கும் இருக்கும் கனெக்ஷன் குறித்து. அதாவது இந்த நடிகை இயக்குநரை தனது கையில் வைத்துக் கொள்ள பல ஜகஜால வேலைகளைச் செய்துள்ளாராம்.

சில்மிஷ வேலைகள்: இது ஒரு கட்டத்தில் படப்பிடிப்புத் தளத்திலேயே சில சில்மிஷ வேலைகளை இவர்கள் பார்த்துள்ளார்கள். பொதுவாகவே சீரியலில் நடிப்பவர்களுக்கு கேரவன் கிடையாது என்பதால், நடிகையும் இயக்குநரும் கொஞ்சம் அடக்கி வாசித்து வந்துள்ளார்கள். அப்படி இருந்தும் இவர்களின் சேட்டைகளை மற்ற நடிகர் - நடிகைகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.
மற்ற நடிகர்கள் பார்த்த வேலை: இப்படி இருக்கும்போது மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்ன செய்துள்ளார்கள் என்றால் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி, சீரியலின் புரோமோ மற்றும் சீரியல் தொடர்பான யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள வீடியோக்களின் கமெண்ட் செக்ஷனில் இது குறித்து கமெண்ட் செய்யச் சொல்லி உள்ளார்கள் போல. அவர்களும் சீரியலில் புரோமோ வீடியோக்களில் என்ன இயக்குநரே அந்த கதாபாத்திற்கு மட்டும் இந்த அளவுக்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டு உள்ளீர்கள், அந்த நடிகைக்கும் உங்களுக்கு ஏதாவது தொடர்பா எனவும், அந்த நடிகை இயக்குநரை மயக்கீட்டார் போலயே எனவும் கமெண்ட் போட்டு, சந்தி சிரிக்க வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











