அப்படி நடந்தால் அப்பா, மகள் உறவே இல்லை.. எப்படி மனசு வருது?.. மகளின் பேச்சால் ஆடிப்போன உச்ச நடிகர்

By Staff

சென்னை: உச்ச நடிகர் இந்த வயதிலும் படு சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். அவரது வேகத்துக்கு இளம் ஹீரோக்கள்கூட ஈடு கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. தற்போது சிறை தொடர்பான படத்தில் நடிக்கும் அவர் அடுத்ததாக தனது நண்பரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார். ஃபிக்ஸ் செய்யப்பட்ட இயக்குநரோ பாதியில் கழன்றுகொள்ள புதிதாக இயக்குநர்கள் தேடும் படலம் நடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் புது கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.

கோலிவுட்டின் கிங்காக கடந்த பல வருடங்களாக கோலோச்சிவருகிறார் உச்ச நடிகர். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு இடையில் கொஞ்சம் சறுக்கல் உருவானது. அதனை வைத்து அவர் அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அந்த சீன்லாம் இங்கே இல்ல ராஜா என்பதுபோன்று அடுத்த படத்திலேயே மெகா ஹிட்டை கொடுத்து தான் ரிட்டையர் ஆகும்வரை நம்பர் 1 இடம் தனக்குதான் என்பதை உணர்த்தினார்.

நண்பரின் தயாரிப்பில்: இப்போது ஒரு படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக தனது நெருங்கிய நண்பரின் தயாரிப்பில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர்கள் இணைந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர் செய்யும் விதமாக இந்தப் படம் அமைய வேண்டும் என்று இரண்டு பேரும் விரும்பியதால் சீனியர் ஒருவரை இயக்குநராக ஃபிக்ஸ் செய்தார்கள்.

Top Tamil Superstar Drops Plan to Approach Lean Actor as Director After Daughter s Strong Opposition

கழன்றுகொண்ட சீனியர்: ஆனால் அந்த சீனியர் இயக்குநரோ சில கதைகளை இரண்டு பேரிடமும் சொல்லியிருக்கிறார். அது அவர்களுக்கு முழுவதுமாக திருப்தி கொடுக்கவில்லை. இனியும் இவர்களை திருப்திப்படுத்த முடியாது என்று முடிவெடுத்து படத்திலிருந்து கழன்றுகொண்டார் சீனியர். இது ஒட்டுமொத்த திரைத்துறைக்குமே ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. அவர் வெளியேறிய பிறகு யார் இயக்குவார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஒல்லி நடிகரின் பெயர்: அந்தப் படத்தின் இயக்குநர் என்று பலரது பெயர்கள் அடிபட்டாலும் அதிக கவனம் ஈர்த்தது என்றால் ஒல்லி நடிகரின் பெயர்தான். சமீபத்தில் அந்த ஒல்லி நடிகர் இயக்கிய படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. குடும்பத்தினர் கொண்டாடும் படமாக அந்தப் படம் அமைந்தது. எனவே அவர் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கிளப்பிவிட; அது சோஷியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவிவிட்டது.

கண்டிஷன் போட்ட மகள்: இந்த செய்திகள் உச்ச நடிகருக்கும் சென்றதாம். அவருக்கும் அந்த நடிகரிடம் கேட்டால் என்ன என்றுதான் தோன்றியிருக்கிறது. இதுகுறித்து நண்பரிடம் சொல்ல; உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்று க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். ஆனால் இவ்விஷயம் நடிகரின் மூத்த மகளுக்கு தெரியவர; தோட்டத்து வீட்டில் பூகம்பத்தையே கொண்டுவந்துவிட்டாரம். அவரை பார்க்கவே கூடாது என்று நான் இருக்கிறேன்; நீங்கள் கதை கேட்கும் யோசனையில் இருக்கிறீர்களா?.. அப்படி எதாவது நடந்தால் என்னை மறந்துவிடுங்கள். உங்களுக்கும் எனக்கும் உறவே இல்லை என்று பொதுவெளியில் அறிவித்துவிடுவேன் என்று சொல்ல; ஆடி போய்விட்டாராம் நடிகர். எனவே ஒல்லி நடிகரின் நினைப்பையே தனது மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X