கைமாறிய பிரபல தொலைக்காட்சி?.. தூக்கி வீசப்பட்ட பெண் பிரபலம்.. அச்சச்சோ இப்படி ஆகிப்போச்சே!

By Staff

சென்னை: தொலைக்காட்சி வட்டாரங்களில் கடந்த சில வாரங்களாகவே பேசிக்கொண்டு இருக்கும் விஷயம் என்னவென்றால் தமிழில் டி.ஆர்.பியில் கலக்கிக் கொண்டு இருக்கும் ஒரு தொலைக்காட்சி சேனலை மொத்தமாக கை மாறிவிட்டது எனக் கூறுகிறார்கள். இந்த சூழலில் அந்த தொலைக்காட்சியை புதிதாக வாங்கியுள்ள நிறுவனம், அந்த பெண் பிரபலத்தை கழட்டி விட்டுள்ளதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டு உள்ளது.

அதாவது இந்த சேனல் தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொண்ட தொலைக்காட்சி சேனல்களில் முன்னணி தொலைக்காட்சி சேனலாக உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒருவருக்கு நிகழ்ச்சி தொகுக்கவோ, அல்லது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் போட்டியாளராகவோ வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் நபர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். மேலும் இந்த தொலைக்காட்சியில் இடம் பிடிப்பவர்கள் ஸ்டார்களாக மாறிவிடுகிறார்கள். இதனால் பலரும் இந்த தொலைக்காட்சி சேனலை நோக்கி நகர்கிறார்கள். இப்படியான பிம்பங்கள் இந்த தொலைக்காட்சி சேனல் மீது இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தொலைக்காட்சி மீது சில புகார்கள் கிசுகிசுக்களாக உலா வந்தது.

சமீபத்தில் கூட அந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் துணை நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவியது. இது மட்டும் இல்லாமல், அது ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சேனலைப் பொறுத்தவரையில் அங்கு இருந்த மூத்த பிரபலங்களை எல்லாம் ஒரு பெண் பிரபலம் சில உள்ளடி வேலைகளைப் பார்த்து கழட்டி விட்டுள்ளார். அதற்கு அந்த பெண் பிரபலத்திற்கு, தொலைக்காட்சி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் அந்த பெண் பிரபலம் ஓவர் ஆட்டம் போட்டுள்ளார். குறிப்பாக பல பேர் முன்னிலையில் தனக்கு பிடிக்காதவர்களை கண்டபடி திட்டுவாராம் இந்த பிரபலம். ஓவராக சீன் போடுவது, யாரையும் மதிக்காமல் இருப்பது என இவரது நடவடிக்கைகள் குறுநில ராணி போல இருக்குமாம்.

tamil television Gossip famous tv channel removes female celebrity

கைமாறிய சேனல்: இப்படி இருக்கும்போது தற்போது அந்த பிரபல தொலைக்காட்சியை வைத்திருந்த நிறுவனம் தற்போது வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர், இந்த சேனலை விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளார்கள். பெண் பிரபலத்தின் கெட்ட நேரமோ என்னவோ, இந்த சேனலை வாங்கிய நிறுவனம் இந்த பெண் பிரபலத்தை தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஊழியர்களையும் நாங்கள் அப்படியே டேக் ஓவர் செய்து கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்கள்.

அப்செட்: யானை நடக்கும் போது எறும்புகள் மிதிபடுவது இயல்புதானே என இந்த விஷயத்தை கேள்விப்பட்டவர்கள் பேசி வருகிறார்களாம். இந்த சம்பவத்தால் பெண் பிரபலம் ரொம்பவும் அப்செட் எனக் கூறுகிறார்கள். மேலும் இந்த பெண் பிரபலம் பல பேரிடம் ஓவர் ஆட்டம் போட்டுள்ளார். இதனாலே என்னவோ இப்போது இந்த பிரபலத்தின் நிலையைக் கேள்விப்பட்டு , அவங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என பேசி வருகிறார்களாம். இப்போது சேனல் நிர்வாகம் மொத்தமாக மாறிவிட்டதால் முன்னர் இருந்த பிரபலங்களை எல்லாம் மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X