சீரியல் நடிகைகளை சீரழிக்கும் சின்னத்திரை புள்ளி.. அனுசருச்சு போனா பொழச்சுக்குவனு அட்வைஸ் வேற!
சென்னை: வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ இதில் எங்கு நடிகையாக ஜொலித்தாலும், பல நடிகைகள் எதிர் கொண்ட விஷயம் என்றால் அது அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைதான். இந்த பிரச்னைகள் குறித்து வெளியே சொல்லும் பல நடிகைகள், தங்களுக்கு யாரால் அப்படி தொல்லை கொடுக்கப்பட்டது என்று பெருமாலும் சொல்லுவது கிடையாது. அண்மையில் கூட சின்னத்திரை நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிய விடப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இப்படியான நிலையில் சின்னத்திரையில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இருக்கும் முக்கியப் புள்ளி தான் ஒருவர் எந்த சீரியலில் நடிக்க வேண்டும், எந்தெந்த ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்யும் இடத்தில் உள்ளாராம். அவர் சொல்வதுதான் அங்கு நடக்கும் என்பதால் பலரும் அந்த முக்கியப் புள்ளியைக் கைக்குள் போட்டு வைத்துக் கொள்ள தங்களையே தாரை வார்த்துக் கொடுக்கும் சின்னத்திரை நடிகைகளும் சில பெண் பிரபலங்களுமே இருக்கிறார்களாம்.
இந்த முக்கியப் புள்ளி, சீரியல்களின் படப்பிடிப்பு நடக்கும் போது அங்கு சென்று யாரையும் தொந்தரவு செய்வது கிடையாதாம். அதே நேரத்தில் பெரிய பெரிய ஆளுமைகள் நடுவர்களாக பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பின் போது சென்றாலும் யாரையும் எதுவும் தொந்தரவு செய்து இல்லையாம். மாறாக நடுவர்களே இல்லாத, முழுக்க முழுக்க ஜனரஞ்சக நோக்கில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பின் போது அங்கு செல்கிறாராம். மேலும் அந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள வேண்டும் என்ற லிஸ்ட்டையே அவர்தான் முடிவு செய்கிறாராம்.

கேரவன் சமாச்சாரம்: தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருக்கும் பிரபலங்கள் இடையில் காணாமல் போக காரணமே இந்த முக்கியப் புள்ளி தானாம். அதாவது அவர் தான் ஏற்கனவே பேசி வைத்த சீரியல் நடியை தனது கேரவனில் தனிமையில் சந்திக்கவே செல்வாராம். மொத்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் முடிவதற்குள் அந்த நடிகையை மீண்டும் அனுப்பி விடுவாராம்.
இளம் நடிகை: இப்படி ஒரு முறை அந்த புள்ளியை கேரவனில் புதுமுக நடிகை ஒருவர் சென்று சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார். தான் நடித்த பல காட்சிகள் கொண்ட வீடியோக்களை எல்லாம் காட்டியும் உள்ளார். ஆனால் அந்த புள்ளியோ, இங்கு நீ நடிக்க வேண்டும் என்றால் அதற்கு சில சம்பிரதாயங்கள் உள்ளது. அதை எல்லாம் நீ செய்வாய் என்றால் தாராளமாக நடிக்கலாம் எனக் கூறி உள்ளார். இதைக் கேட்ட அந்த இளம் நடிகை ஒரு கணம் அதிர்ந்து போய்விட்டாராம். இது குறித்து இன்னொரு நடிகையிடம் கூறினால் அந்த நடிகையோ அனுசரித்து போய்க்கோ அப்பதான் உனக்கு நல்லது எனக் கூறியுள்ளார். இப்போது அந்த இளம் நடிகை என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











