நம்பிய சீரியல் நடிகை.. காதலிக்கிறேன்னு சின்னாபின்னமாக்கிய சீரியல் நடிகர்.. எல்லாம் அதுக்காகத்தானாம்!
சென்னை: சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக அடுத்தடுத்து திருமணங்கள் செய்து வந்தார்கள். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களே அவர்களுக்கு முன்னின்று திருமணங்களை நடத்தி வைத்தது. இப்படி இருக்கும் இந்த சீரியல் நடிகரும் தன்னுடன் நடித்த நடிகையை தனது வாழ்க்கைத் துணையாக மாற்றிக் கொள்ள பல முயற்சிகளை எடுத்துள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியோடு வாழ்ந்து வருகிறார். இப்படியான சீரியல் நடிகரை நம்பி சின்னாபின்னமாக மாறியுள்ளார் அந்த சீரியல் நடிகை.
இந்த சீரியல் நடிகை பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். முன்னணி சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக அந்த சீரியல் சீரியல் நடிகரும் நடித்துக் கொண்டு இருந்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆன இந்த சீரியல் நடிகர், தனது மனைவியிடம் தங்களது திருமணம் குறித்து வெளியில் எதுவும் பேச வேண்டாம் எனக் கூறிக் கொண்டு இருந்துள்ளார். அதனால் மனைவியும், கணவனே கண் கண்ட தெய்வம் என திருமண வாழ்க்கை குறித்து எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.
ஆனால் இந்த சீரியல் நடிகரோ தன்னுடன் சீரியலில் நடிக்கும் மலபார் நாட்டு சீரியல் நடிகையை அடைய, காதல் வலையை வீசியுள்ளார். அப்படி வீசுகையில், தனக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்து விட்டதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். ஆனால், மனைவி இவரோடு தான் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும்போது, இந்த சீரியல் நடிகரின் வலையில் சிக்கிய அந்த சீரியல் நடிகை, தனி வீடு எடுத்து ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.

சின்னாபின்னமாகிய நடிகர்: சூட்டிங்கிற்கு இருவரும் ஒன்றாக வருவது, ஒன்றாக போவது என இருந்ததைப் பார்த்து தான் மற்றவர்களுக்கு தெரிந்துள்ளது. இப்படியான காலத்தில்தான் அந்த சீரியல் நடிகர், தன்னை நம்பி வந்த சீரியல் நடிகையை சின்னாபின்னமாக்கி உள்ளார். காதலன், எதிர்காலக் கணவன் என நம்பிய சீரியல் நடிகை, தன்னை பலமுறை அந்த சீரியல் நடிகரிடம் பறிகொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகைக்கும் நடிகருக்கும் சில கருத்து வேறுபாடுகள் வர, நடிகையை கண்டபடி திட்ட ஆரம்பித்தாராம் நடிகர்.
நடிகரின் காம ஆட்டம்: ஆனால் நடிகையோ, இப்படி எல்லாம் பேசாதே, நான் என்ன நடந்தாலும் உன்னோடு நான் இருப்பேன், என்னை விட்டுப் போகாதே என தனது காதலை உருகி உருகி வெளிப்படுத்தியுள்ளார். நடிகை இந்த அளவுக்கு இறங்கி போவார் என கொஞ்சமும் நினைக்காத அந்த சீரியல் நடிகர், நடிகையை மிகவும் மோசமாக நடத்தி வந்துள்ளார். தன் மீது அந்த நடிகருக்கு கொஞ்சம் கூட காதல் இல்லை, நடிகர் தன்னிடம் நெருங்கி வருவதே காமத்திற்கு மட்டும் தான் என ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டுள்ளார் அந்த நடிகை.
புத்தி சொன்ன பிரபலம்: நடிகை தான் நம்பவைத்து ஏமாற்றப்பட்டு உள்ளேன் என்பதை தெரிந்து கொண்ட பின்னர், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அந்த காலகட்டத்தில் நடிகையின் நட்பு வட்டத்தில் இருந்த பெண் பிரபலம் ஒருவர், உன்னோட காதலுக்கு அந்த நடிகர் கொஞ்சம் கூட தகுதியில்லாதவன். காதல் எப்போதுமே சுயமரியாதையை இழக்க செய்யாது என்று கூறியுள்ளார். இந்த அறிவுரைக்கு பின்னர்தான் நடிகை புத்தி வந்து, நடிகரை முழுவதுமாக விட்டு விலகி உள்ளார். ஆனால், சீரியல் நடிகரோ, வந்த வேலை முடிந்துவிட்டது என வேறு ஒரு பெண்ணைத் தேட ஆரம்பித்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











