ஒரே கல்லில் 2 மாங்காய்.. நடிகையின் டார்கெட் முடிந்தது.. நடிகரின் டார்ச்சர் தான் பிரச்னையா இருக்காம்
சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, தற்போது முன்னணி இடத்தைப் பிடிக்க போராடி வரும் அந்த வாரிசு நடிகைக்கு, சமீபகாலமாக எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் எப்படியாவது ஒரு பெரிய பிராஜெக்ட்டில் கமிட்டாகி விட வேண்டும் என்று காய் நகர்த்தி வந்தார். அவரது கணக்குப்படியே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, டாப் இயக்குநர் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இணையும் ஒரு புதிய மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க நடிகைக்கு அழைப்பு வந்தது.
இதைக் கேட்டு துள்ளி குதித்த நடிகை, 'நம்ம டார்கெட் அச்சீவ் ஆயிடுச்சு' என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். படம் பெரிய ஹிட் அடித்தால், சினிமாவில் தனது அடுத்த ஐந்து வருடத்திற்கான இடத்தை கெட்டியாக பிடித்துவிடலாம் என்பதுதான் நடிகையின் மாஸ்டர் பிளான்.

ட்விஸ்ட் கொடுத்த வாரிசு நடிகர்: இப்படி இருக்கையில், அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் அந்த வாரிசு நடிகர், நடிகைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளாராம். பொதுவாகவே அந்த நடிகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரின் வேலையில் தலையிடுவது, காட்சிகளை மாற்றி அமைக்க சொல்வது என கொஞ்சம் ஓவராகவே சீன் போடுவார் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு உண்டு. அதேபோல, இந்த புதிய படத்திலும் நடிகையின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் சில காட்சிகளை நீக்கச் சொல்லி, ஹீரோவுக்கு முக்கியத்துவம் இருக்கும்படி கதையை மாற்ற சொல்லி இயக்குநருக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறாராம்.
கவலையில் நடிகை: கதை மாறினால், படத்தில் தனக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்காது என்பதை உணர்ந்த நடிகை, இப்போது மிகுந்த கவலையில் இருக்கிறாராம். 'பெரிய படம்னு ஆசைப்பட்டு வந்தா, இந்த ஹீரோ இப்படி டார்ச்சர் பண்றாரே' என்று புலம்பி வருகிறாராம். நடிகரின் இந்த தலையீட்டால், நடிகையின் டார்கெட் நிறைவேறுமா அல்லது அவரது கனவு கலைந்து போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.


Click it and Unblock the Notifications