மலையாள நடிகர் பேச்சை கேட்டு நடக்கும் டீச்சர் நடிகை
சென்னை: டீச்சர் நடிகை மலையாள நடிகர் ஒருவர் சொல்படி தான் நடக்கிறாராம்.
டீச்சர் நடிகை தமிழ் படங்களில் நடிக்க முதலில் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிறகே ஒரு வழியாக தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது அவரை தேடி வாய்ப்புகள் வந்து குவிகின்றது.

நடிகை தமிழ் திரையுலகில் யாரையும் நம்பாமல் தள்ளியே உள்ளாராம். யாருடனும் அவ்வளவாக பேசுவது இல்லையாம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் நடிகை.
நடிகை இப்படி ஒதுங்கி ஒதுங்கி போவதற்கு இளம் மலையாள நடிகர் தான் காரணம். அனைவருடனும் நெருங்கிப் பழகி பேசினால் தேவையில்லாத பேச்சுக்கள், கிசுகிசுக்கள் வரும். அதனால் தேவையில்லாத டென்ஷன் தான்.
யாருடனும் அவ்வளவாக பேசாமல் இருப்பதே நல்லது என்று நடிகர் டீச்சருக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications