»   »  தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறாரா இந்த நடிகை?

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறாரா இந்த நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இவளுக்கு நாம சூனியம் வைக்க வேண்டியது இல்லை அவளே வைத்துக்கொள்வாள் என்று டீச்சர் நடிகையை பார்த்து பிற நடிகைகள் சந்தோஷப்படுகிறார்கள்.

ஒரேயொரு படம் மூலம் ஏகப் பிரபலமானார் டீச்சர் நடிகை. அவரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க எத்தனையோ பேர் முயன்றும் பிடி கொடுக்காமல் இருந்தவர் இறுதியாக கோலிவுட் வந்துவிட்டார்.

நடிகை எந்த வேகத்தில் வளர்ந்தாரோ அதே வேகத்தில் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

நடிகை ரொம்ப திமிர் பிடித்தவர், ஓவர் சீன் போடுவார் என்று திரைத்துறையினர் பேசி வருகிறார்கள். மேலும் இளம் ஹீரோக்கள் சிலர் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நடிகை அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை பார்த்து சில சக நடிகைகள் சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் மேலும் மகிழ்ச்சியடையும்படி ஒரு விஷயம் நடந்துள்ளது.

நிராகரிப்பு

நிராகரிப்பு

அட்ஜஸ்மென்ட் செய்ய மறுப்பதால் டீச்சர் நடிகையை பற்றி சிலர் கொளுத்திப்போடும் நேரத்தில் அவர் வாரிசு நடிகருடன் நடிக்க பெரிய தொகையை கேட்டிருக்கிறார். பின்னர் அந்த நடிகருடன் நடிக்க மறுத்துள்ளார்.

மண்

மண்

ஏற்கனவே நடிகையின் பெயர் டேமேஜாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் வாரிசு நடிகர் படத்தில் நடிக்க மறுத்துள்ளதை பார்த்த சில நடிககைள் இவளுக்கு வேறு யாரும் சூனியம் வைக்க வேண்டாம். அவள் கெரியரை அவளே நாசமாக்கிவிடுவாள் என்கிறார்கள்.

அடம்

அடம்

நடிகை வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் ஓவராக சம்பளம் கேட்பதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. கை வசம் படித்த படிப்பு இருப்பதால் இப்படி துணிந்து ரிஸ்க் எடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Teacher actress's rivals are happy after she refused to act with a young actor. Teacher actress's image is getting damaged now a days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X