»   »  'சக்கரக்கட்டி'க்கு ஜோடியாக நடிக்க மறுத்த 'டீச்சர்' நடிகை.. கடுப்பான டைரக்டர்!

'சக்கரக்கட்டி'க்கு ஜோடியாக நடிக்க மறுத்த 'டீச்சர்' நடிகை.. கடுப்பான டைரக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கருப்புக் கண்ணாடி நடிகர் அடுத்து இயக்கவுள்ள படத்தில், சக்கரக்கட்டி ஹீரோ நடிக்கிறார். சக்கரக்கட்டி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கமாட்டேன் என்று 'டீச்சர்' நடிகை கூறியுள்ளார். இதனால் கோபமான இயக்குநர் நிச்சயமாக என் படத்துக்கு 'டீச்சர்' நடிகை வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்.

வளர்ந்த நடிகரை வைத்து துப்பறியும் படத்தை எடுத்த கருப்பு கண்ணாடி டைரக்டர் அடுத்து பெரிய இயக்குநரின் மகனான சக்கரக்கட்டி நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Teacher actress says, I wont act with sakkarakatti hero

இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக் முடிந்ததும் துவங்குகிறது. இந்தப் படத்தில் கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. சமீபத்தில் வெய்ட் போட்ட 'மெர்சல்' படத்தின் நாயகி இந்தப் படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க 'டீச்சர்' நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

கதையைக் கேட்காமலேயே பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார் 'டீச்சர்'. அத்துடன் சக்கரக்கட்டிக்கு ஜோடியாக நான் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே கோபமான இயக்குனர், என் படத்துக்கு டீச்சர் வேண்டவே வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம். டீச்சர் நடிக்கவிருந்த கேரக்டரில் நடிக்க இன்னொரு 'மெர்சல்' நாயகியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

English summary
Cooling glass Director to direct 'Sakkarakkatti' hero's film. 'Teacher' actress says, 'I won't act with that actor'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X