For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தேஜாவின் குத்துபுடி

  By Staff
  |

  குச்சிப்புடி ஆட்டத்தில் அசத்தும் தேஜா ஸ்ரீ, சமீபத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில்செம குத்தாட்டம் போட்டு கடலையே கலக்கி எடுத்து விட்டாராம்.

  ஆனால் இந்தக் குத்தாட்டம் எந்தப் படத்திற்காகவும் இல்லை, ஒரு தண்ணிப்பார்ட்டியில் என்பதுதான் இங்கே மேட்டர்.

  த்ரிஷா சாலை என்று பெயரையே மாற்றும் அளவுக்கு ரொம்ப பேமசாகி விட்டதுசென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை. பாலவாக்கம் தாண்டி புதுவையை நெருங்கும்வரை இந்த சாலையில் உள்ள ஏகப்பட்ட கிளப்கள், ரிசார்ட்டுகளில் எப்போபார்த்தாலும் ஆட்டம், பாட்டில், கொண்டாட்டம்தான்!

  படு சூடாக இருக்கும் நகரத்தின் நரகத்திலிருந்து தப்பித்து மாலைப் பொழுதுகளைஜோடி ஜோடியாக வந்து கழித்து விட்டு, நள்ளிரவைத் தாண்டி வீட்டுக்குப் போய்அடைகிறார்கள் சென்னை நகரின் வசதியான இளசுகள்.

  அப்படித்தான் த்ரிஷாவும் தனது தோழியர் குழாமோடு வந்து சாலையை ஒட்டியுள்ளஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு தண்ணி போட்டு கும்மாளமடிக்கப் போய்போலீஸாரிடம் சிக்கினார். பின்னர் இனிமேல் செய்ய மாட்டேன் என்று பிராமிஸ்பண்ணி விட்டு எஸ்கேப் ஆனார்.

  த்ரிஷா மேட்டரைத் தொடர்ந்து கிழக்குக் கடற்கரைச் சாலை ரிசார்ட்டுகள், கிளப்களுக்குசென்னை மாநகர போலீஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

  ஆரம்பத்தில் இதை கடைப்பிடிப்பது போல இந்த உல்லாச விடுதிகள் காட்டிக்கொண்டாலும், இப்போது அத்தனை எச்சரிக்கையையும் காற்றில் பறக்க விட்டுவிட்டனவாம்.

  சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வீரரின் விருந்து நிகழ்ச்சி உத்தண்டியை அடுத்துள்ள ஒருரிசார்ட்டில் நடந்துள்ளது. இந்த விருந்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

  நடிகர் ஆர்யா (இவர் மகா ஜொள்ளு பார்ட்டி), நடிகை தேஜாஸ்ரீயும் இதில்பங்கேற்றுள்ளார்கள். பார்ட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பாட்டில் மூடிகளின்சத்தம் கடல் அலைகளை டிஸ்டர்ப் செய்து கொண்டே இருந்ததாம்.

  விடிய விடிய நடந்த இந்தக் கொண்டாட்டத்தில், ஆர்யாவுடன் சேர்ந்து ஆட இளம்பெண்களுக்கிடையே கடும் போட்டியே நிடந்ததாம். ஒருவரை ஒருவர் போட்டிபோட்டுக் கொண்டு ஆர்யாவுடன் ஆடி மகிழ்ந்தார்களாம்.

  மறுபுறம் தேஜாஸ்ரீயோடு பல ஆண்கள் இணைந்து ஆடி பரவசம் பெற்றார்களாம்.

  பல்வேறு வகையான நடனங்களை ஆடி அனைவரையும் மகிழ்வித்த தேஜாஸ்ரீகுச்சிப்புடி, குத்தாட்டம் என வெரைட்டியாக விருந்து வைத்து எல்லோரையும்குஷிப்படுத்தியுள்ளார்.

  விடிய விடிய நடந்த இந்த ஆட்டம், சூரியன் பூமி பக்கமாய் வருவதற்கு சற்றுமுன்புதான் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததாம். ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்தஅத்தனை பேரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு அவரவர் கார் ஓட்டுனர்கள்வேகமாக வண்டியைக் கட்டினார்களாம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X