ஓவர் நெகடீவ் ரியாக்ஷன்.. குழப்பத்தில் சின்னத்திரை இயக்குநர்.. உச்சகட்ட கடுப்பில் ராஜ்ய நடிகை
சென்னை: சின்னத்திரையில் விரைவில் தொடங்கவுள்ள ஒரு புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியைச் சுற்றி, ஒளிபரப்புக்கு முன்பே பரபரப்பான பேச்சுகள் கிளம்பி இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக வலைதளங்களில் ஓவர் நெகடீவ் ரியாக்ஷன்கள் குவிந்திருப்பதுதான் இதற்குக் காரணமாம்.
பிரிந்துபோன ஆண்கள், பெண்களை ஒரே வீட்டில் தங்கவைத்து, அவர்களுக்குள் மீண்டும் காதல் மலருமா என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் புரொமோவில் இடம்பெற்ற சில காட்சிகளே ரசிகர்களிடம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
"இது வேறொரு ஹிட் ரியாலிட்டி ஷோவின் லவ் டிராக்கை மட்டும் தனியாக எடுத்த மாதிரி இருக்கே", "குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா?", "இது எந்த திசையில் போகப் போகிறது?" என்ற கேள்விகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக எழுந்திருக்கின்றன. குறிப்பாக சில நெருக்கமான காட்சிகள் தேவையில்லாமல் புரொமோவில் இடம்பெற்றிருப்பதாகவும், அதுவே எதிர்மறை விமர்சனங்களுக்கு காரணமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஷாக் ரியாக்ஷன்ஸ்: இந்த எதிர்பாராத ரியாக்ஷன்களால் நிகழ்ச்சியை வடிவமைத்த இயக்குநர் தரப்பு தற்போது குழப்பத்தில் இருப்பதாகவும், அடுத்தடுத்து வெளியாகும் புரொமோக்களில் மாற்றம் செய்யலாமா, நிகழ்ச்சியின் உண்மையான நோக்கத்தை இன்னும் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லலாமா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல்.
இதற்கிடையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அந்த ராஜ்ய நடிகை மட்டும் இந்த விமர்சனங்களால் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஒரு புரொமோவை மட்டும் பார்த்துவிட்டு முழு நிகழ்ச்சியையும் தீர்ப்பளிப்பது சரியல்ல என்ற மனநிலையில்தான் அவர் இருப்பதாகவும், நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகுதான் அதன் உண்மையான உள்ளடக்கம் புரியும் என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறியிருப்பதாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஹாட் டாப்பிக்: ஒளிபரப்பே இன்னும் தொடங்காத நிலையில் இவ்வளவு விவாதம் கிளம்பியிருப்பதால், முதல் எபிசோட் வெளியாகும் நாளை எதிர்பார்த்து சின்னத்திரை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், இந்த எதிர்மறை விமர்சனங்களை நிகழ்ச்சி தரப்பு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் தற்போது கோலிவுட் மற்றும் சின்னத்திரை வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications