»   »  இது சின்னத்திரை திரைமறைவுகள்… கம்முன்னு படிங்க

இது சின்னத்திரை திரைமறைவுகள்… கம்முன்னு படிங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்னத்திரையில் தினந்தோறும் திருவிழாதான் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என ஏதாவது ஒன்றை ஒளிபரப்பிப்கொண்டுதான் இருப்பார்கள். எதுவுமே இல்லை என்றாலும் போட்ட நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்வார்கள்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குப் போனவர்கள் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புவதும். பெரியதிரை நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்தவார கிசுகிசு இருவரைப் பற்றியும் உள்ளது சும்மா கம்முன்னு படிங்க சரியா.

அடுத்த குடும்பத் தொடர்

இலை தொலைக்காட்சியில் செல்வம் இயக்குநரின் அடுத்த குடும்பத் தொடர் ஆரம்பமாகிவிட்டது. இதுவும் குடும்பத் தொடர்தான். சூரிய தொலைக்காட்சியில் சீரியல் பயணத்தை ஆரம்பித்து இலை தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பயணித்து வரும் செல்வம் இயக்குநருக்கு இன்னமும் சரியாக சினிமா பாதை செட் ஆகவில்லை என்கின்றனர்.

திருட்டுமுழி இயக்குநரின் சீரியல் ஹீரோ அவதாராம்

யுக தொலைக்காட்சியில் பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்திய திருட்டுமுழி இயக்குநர் கம் நடிகர் தற்போது சீரியலில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். காமெடியும் தங்கைகள் சென்டிமென்டும் கலந்த இந்த சீரியல் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

சின்னத்திரைக்கு முழுக்கு போடும் தொகுப்பாளினி

மலையாள தேசத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்த அவர் தமிழில் சூரிய டிவி தொகுப்பாளரை காதல் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். கொஞ்ச நாட்களிலேயே மறுபடியும் தொலைக்காட்சிக்கு வந்தார். ஆனால், தொலைக்காட்சி வாய்ப்புகளைவிட சினிமா வாய்ப்பு அதிகமாக வரவே பெரிய திரைபக்கம் போனார். கணவனும், மனைவியும் இணைந்து தேடியும் சின்னச் சின்ன வாய்ப்புகள்தான் கிடைத்தன. இதனால் மீண்டும் டிவி பக்கம் ஒதுங்கலாமா என்று யோசிக்கும் போது தற்போது தொகுப்பாளினி நாயகியாக நடித்த படத்திற்கு பாராட்டு கிடைத்துள்ளது. அதனால், இனி சின்னத்திரை வேண்டாம், பெரிய திரையே போதும் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால் தொகுப்பாளரான கணவர்தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறாராம்.

கடைசியில இவரும் வந்துட்டாரா

தீப்பிடிக்க தீப்பிடிக்க நடனமாடிய அந்த நாயகி தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் சொந்த மொழியான பஞ்சாபி படங்களிலும் நடித்தார். அங்கும் வாய்ப்பு குறையவே இந்திக்குப் போன அவர் பாலிவுட் சீரியல்களில் நடித்தார். அதுவும் அக்கா கதாபாத்திரம்தான் கிடைத்தது. 5 ஆண்டுகள் கழித்து இந்த பாலிவுட் தொடர்கள் டப்பிங் செய்யப்பட்டு மாம்பழ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. விரைவில் நேரடி தமிழ் சீரியலில் இந்த தீ நாயகி தலைகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Here it is the televisions gossip news.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil