3 எழுத்து நடிகையின் திருமண வதந்தி.. காதலித்து ஏமாற்றிய தெலுங்கு நடிகர்.. கேரவனில் நடந்த சண்டை!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த மூன்று எழுத்து நடிகைக்கு தெலுங்கு நடிகருடன் திருமணம் நடந்து விட்டதாக இணையத்தில் பலவிதமான போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இது குறித்து சினிமா பிரபலம் ஒருவர் youtube சேனல் ஒன்றில் பேசி உள்ளார்.

மூன்றெழுத்து நடிகை, தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் வெளியாகி இருக்கும் போட்டோக்கள் உண்மை இல்லை. ஏனென்றால், மூன்றெழுத்து நடிகைக்கும் உயரமான நடிகருக்கு ஒத்துவராது. அந்த உயரமான நடிகர் ஏற்கனவே காதலில் தோற்றுப்போனவர். அவர், வரலாற்று புகழ் பெற்ற திரைப்படம் ஒன்றில் தன்னுடன் இணைந்து நடித்த அம்சமான நடிகையை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால், திடீரென அந்த காதல் முறிந்து விட்டது. தற்போதும் அந்த தெலுங்கு நடிகர் முரட்டு சிங்கிளாக தான் இருக்கிறார். இதனால் தான், மூன்றெழுத்து நடிகையுடன் திருமணம் நடந்து விட்டதாக வரும் செய்தி உண்மை இல்லை என்றார்.

kisu kisu Gossip tamil cinema

கழட்டிவிட்ட நடிகர்: மூன்றெழுத்து நடிகை சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே, பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்த போது தெலுங்கு சினிமாவிற்கு சென்றார். அப்பொழுது அங்கு பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த தெலுங்கு நடிகர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் லிவ்விங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நேரத்தில், பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நடிகர், நடிகையை திருமணம் செய்து கொண்டால், குடும்ப பாரம்பரியம் கேட்டுவிடும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், தெலுங்கு நடிகர் 3 எழுத்து நடிகையை கழட்டிவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளாக லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த மூன்றெழுத்து நடிகை மன உளைச்சலுக்கு ஆளாகி தெலுங்கு சினிமாவே வேண்டாம் என முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தார்.

கேரவனில் சண்டை: அதன் பிறகு, தான் தமிழ் சினிமாவில் பல கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகருடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவின. ஆனால், பல கோடி சம்பளம் வாங்கும் அந்த நடிகர் பல நடிகைகளுடன் நெருங்கி பழகியதால், இருவருக்கும் சண்டைகள் வந்தன. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்த 3 எழுத்து நடிகை, கேரவனில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரிடம் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு தான், 3 எழுத்து நடிகையை சமாதானப்படுத்திய நடிகர், தன்னுடைய அடுத்த படத்தில் நீ தான் கதாநாயகி, என்று உத்தரவாதம் கொடுத்து, தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார். அதொடு மட்டுமில்லாமல், மற்றொரு படத்தில் ஒரு முக்கியமான பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கொடுத்தார். அந்த டாப் நடிகர், 3 எழுத்து நடிகையை தன் அருகிலேயே வைத்துக்கொள்ள விரும்புகிறார். இருவரும் சினிமாவில் சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும், இருவரும் சேர்ந்து நட்பை வளர்ந்து வருகின்றனர் என்று அந்த சினிமா பிரபலம் பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X