ஆயுஷ்ய யாகத்தில் நடிகை கழுத்தில் கட்டிய தாலி.. தெலுங்கு நடிகர் செய்த அட்டகாசம்.. பரிதவிக்கும் நடிகை!

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அந்த மூன்று எழுத்து நடிகை. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த அந்த நடிகை, தற்போது இருக்கும் இடம் கூட தெரியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு, வெளியில் தலைக்காட்டாமல் இருக்கிறார். அவரின் இந்த நிலைமைக்கான காரணம் குறித்து பிரபலம் ஒருவர் சொன்னது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மூன்று எழுத்து நடிகையின் அம்மா பெரிய நடிகை. பெயர், புகழ், சொத்து, சுகத்துடன் அந்த காலத்தில் கொடி கட்டி பறந்தார். தமிழில் அறிமுகமான இவர், பின்காலத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என அனைத்து முன்னணி மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் தெலுங்கு ஸ்டார் நடிகர் ஒருவருடன் அடுத்தடுத்து பல படத்தில் நடித்தார்.

Gossip tamil cinema kisu kisu

ஆயுஷ்ய யாகம்: அப்போது, அந்த தெலுங்கு ஸ்டார் நடிகருக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தாகும் சூழ்நிலை வந்துள்ளது. அப்போதுதான், அவருக்கு ஆயுஷ்ய யாகம் செய்தால், அவரது ஆயுள் நீளும் என சாமியார் ஒருவர் கூறியிருக்கிறார். இந்த ஆயுஷ்ய யாகத்தின் போது, வயதிற்கு வராத ஒரு பெண்ணின் கழுத்தில், இவர் தாலி கட்டினால் அந்த அந்தப் பெண்ணின் ராசி இவரது ஆயுளை நீட்டிக்கும் என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்டு, அந்த தெலுங்கு ஸ்டார் நடிகரின் வீட்டில் ஆயுஷ்ய யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். அந்த நேரத்தில் பருவமடையாத பெண்ணை தேடி அலைந்த போது தான், மூன்றெழுத்து நடிகை அப்போது பருவம் அடையாத சிறிய பெண்ணாக இருந்திருக்கிறார்.

தாலி கட்டினார்: இதையடுத்து, அந்த ஆயுஷ்மா யாகத்தில் அந்த தெலுங்கு ஸ்டார் நடிகர், மூன்று எழுத்து நடிகையின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்திற்கு ஈடாக அந்த மூன்றெழுத்து நடிகையின் அம்மா கணிசமான பணத்தையும் வாங்கி இருக்கிறார்கள். பருவமே அடையாத வயதில் தனக்கு நடந்த திருமணத்தால், மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் அந்த மூன்று எழுத்து நடிகை. இருந்தாலும் வளர்ந்து பருவம் அடைந்து, தனது அம்மாவிற்காக சினிமாவில் நடிக்க வந்து, அவரும் அம்மாவை போல பெரிய நடிகையாக வலம் வந்தார். மூன்று எழுத்து நடிகை நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. இதனால், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருந்த நடிகை, அம்மாவின் இறப்பிற்கு பின், தனிமையில் வாழ்க்கையை நடத்தி. அதனால், மனதளவில் பாதிக்கப்பட்டு தற்போது வெளியில் தலைகாட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார். அந்த நடிகையின் இந்த நிலைமைக்கு காரணம், அவருக்கு பருவமடையாத வயதில் நடந்த திருமணம் தான் என பிரபலம் ஒருவர் கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X