உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தலைவருக்கு இரண்டு பக்கமும் இடி
Recommended Video

சென்னை: உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்ற நிலைமையில் உள்ளார் உச்ச நடிகர்.
உச்ச நடிகரின் புதுப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் கன்னடர்களுக்கு எதிராக பேசி வருவதாக கர்நாடகாவில் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரின் படத்தை அந்த மாநிலத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
இந்த தடைக்கு முக்கிய காரணமே தண்ணீர் பிரச்சனை பேச்சு தான்.

நடிகர்
என்னை வாழ வைத்த தெய்வங்கள் தமிழர்கள், நான் தமிழன் என்று மார் தட்டுகிறார் உச்ச நடிகர். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் உள்பட பலர் அவரை தமிழராக ஏற்கவில்லை.

கன்னடர்
தமிழக மக்கள் பலர் உச்ச நடிகரை கன்னடராக பார்க்கிறார்கள். கன்னட மக்களோ அவர் தமிழராக மாறிவிட்டார். அதனால் நமக்கு எதிராக பேசுகிறார் என்கிறார்கள்.

இல்லை
உச்ச நடிகர் தமிழர், கன்னடர் என்று எதிலும் சேராமல் உள்ளார். தண்ணீர் பிரச்சனையில் அவர் அப்படி ஒன்றும் பேசாத நிலையில் அவரின் படத்திற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது. அவரின் சொந்த மாநிலம் என்பதால் நீர் பிரச்சனை பற்றி அடக்கி வாசிக்கிறார் என்று தமிழகத்தில் கூறப்படுகிறது. பிழைக்க சென்ற மாநிலத்திற்கு விசுவாசியாகிவிட்டார் என்று கர்நாடகத்தில் குறை சொல்கிறார்கள்.

ஆலை
தூத்துக்குடியில் உள்ள ஆலை பிரச்சனை தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடந்தது. அந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்த பிறகு அங்கு சென்று ஆறுதல் கூறியுள்ள அவரின் செயலை பட விளம்பரத்திற்காக செய்ததாக மக்கள் பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











