»   »  தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட குழப்பங்கள்... தவிக்கும் தளபதி!

தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட குழப்பங்கள்... தவிக்கும் தளபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகர் தன்னை வைத்து டபுள் ஆக்டில் படம் எடுத்து ஃப்ளாப் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் இணைந்திருக்கிறார் அல்லவா... அந்த படத்தின் படப்பிடிப்பில் ஏகப்பட்ட குழப்பங்களாம்.

முதல் ஷெட்யூலில் தயாரிப்பு தரப்புக்கும் டெக்னிஷியன் தரப்புக்கும் முட்டிக்கொண்டது. அதனை சமாளித்து அடுத்த ஷெட்யூலுக்கு போனார்கள்.

ஒருமுறை சண்டைக் காட்சியை படமாக்கும்போது இயக்குனர் திட்டமிடுதலில் சொதப்ப ஹீரோ
கடுப்பாகி தயாரிப்பாளரிடமே போட்டுக் கொடுத்துவிட்டார்.

இப்போது அடுத்த ஷெட்யூலுக்காக பொள்ளாச்சி சென்ற இடத்திலும் பெரிய பிரச்னையாம். மீண்டும் திட்டமிடுதலில் சொதப்பிய இயக்குனரால் அங்கே கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம். இதனால் கடுப்பான ஹீரோ பேக் அப் சொல்லிவிட்டு சென்னை வந்துவிட்டார்.

ஹீரோவை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கியிருக்கிறது.

English summary
Thalapathy actor is in big confusion over his 60th movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil