இயக்குநர் மீது வருத்தத்தில் நடிகர்... மீண்டும் இணைய வாய்ப்பே இல்லையாம்
அந்த இளம் இயக்குநர் மீது தளபதி நடிகர் வருத்தமாக இருக்கிறாராம். எனவே மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட்டை எகிற வைத்தபோதும் ஹெவி பேமெண்ட் கேட்டபோதும் கூட இயக்குநர் மீது நடிகர் எந்த கோபமும் படவில்லையாம். படத்தின் கதையைச் சொன்னபோதே அரசாங்கத்துக்கு எதிரான வசனங்களை சேர்க்கச் சொன்னாராம் நடிகர். அதே நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாராம்.

ஆனால் இயக்குநரின் அலட்சியத்தால் தான் கடைசிக் கட்டத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. இயக்குநர் சென்சாருக்கு அப்ளை செய்யும்போதே கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான விளக்க வீடியோவும் தந்திருந்தால் இந்த சென்சார் சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது. நடிகரும் யார் வீட்டுப் படியேற வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது.
எனவே நம்பிய தன்னை ஏமாற்றி விட்டதாக இயக்குநர் மீது கோபத்தில் இருக்கிறாராம் நடிகர். மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











