»   »  ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு ஆப்பு வைத்த தளபதி நடிகர்

ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு ஆப்பு வைத்த தளபதி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகர் நடித்திருக்கும் மூன்றெழுத்து படம் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் தொடங்கிவிட்டது. இவ்வளவு செலவு செய்த தயாரிப்பாளருக்கு அதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி அதிலும் நாலு காசு பார்த்துவிட்டு, படத்துக்கும் பெரிய பப்ளிசிட்டியை தர ஆசை இருக்கும் அல்லவா?

அதில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டார் ஹீரோ.

Thalapathy say no for audio launch

ஹீரோவுக்கு திடீரென்று ஞானதோயம் ஏற்பட்டு நான்கு டிவி சேனல்களை அழைத்து மத்திய அரசை எதிர்த்துப் பேட்டி கொடுத்து வாயைப் புண்ணாக்கி கொண்டார். மாநிலத்தில் ஆல்ரெடி இணக்கம் கிடையாது. கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த மத்திய அரசு பவரையும் கெடுத்துக்கொண்டார். இதையே காரணம் காட்டி இசை வெளியீடு வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் ஹீரோ. மேனேஜர் தயாரித்த படத்து விழாவில் புரட்சியாளர் பெயரைத் தவறாகச் சொல்லி அது சர்ச்சை ஆனதும் ஹீரோவின் பயத்துக்கு காரணமாம்.

கவுண்டமணி ஸ்டைலில் ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை? என்று தான் கேட்க தோன்றியிருக்கிறது தயாரிப்பாளருக்கு. ஆனால் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டாராம்.

English summary
Due to his recent interview against demonitisation, Thalapathy actor say No for audio launch of his next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil