அப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்!

By

சென்னை: அந்த ஹீரோ மீது அதிரடி புகார் கூறிய இயக்கம், இப்போது அதிகமாக பாசம் காட்டத் தொடங்கி இருக்கிறாராம்.

அந்த ஆக்‌ஷன் நடிகரை வைத்து டிடெக்டிவ் படத்தை இயக்கினார், இயக்கம். வரவேற்பு கிடைத்தது.

அடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தொடங்கினர். முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் இதில் நடிக்கின்றனர்.

முட்டல் மோதல்

முட்டல் மோதல்

இதன் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்து வந்தது. சரியான திட்டமிடல் இல்லாததால், அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இதனால் ஏகப்பட்ட செலவாக, தயாரிப்பாளரான அந்த ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் முட்டல் மோதல். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் வெடித்துவிடும் நிலையிலேயே இருவருக்குமான மோதல் இருந்ததாம்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

ஒரு நாள் மெதுவாக ஆரம்பித்த இந்த கோபம், மோதலுக்குச் செல்ல அருகில் இருந்த படக்குழுவினர், சமாதானம் செய்துள்ளனர். சில நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்துள்ளது. பின்னர் படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையே இயக்குனர் இயக்கி வெளியாகி இருந்த மற்றொரு படம் ஹிட்டாகிவிட, தனது சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டாராம் டைரக்டர்.

வெடித்தது மோதல்

வெடித்தது மோதல்

மறுத்தார், தயாரிப்பாளரான ஹீரோ. இதையடுத்து மோதல் வெடிக்க, படத்தை இயக்க விருப்பமில்லை என்றாராம் இயக்கம். பாதி முடிந்த நிலையில் அந்த இயக்குனர் இப்படி சொன்னதில் கடுப்பான ஹீரோ, சரி என்று சொல்லிவிட்டார். பிறகு படத்தில் இருந்து வெளியேறினார் இயக்கம். இதுபற்றி ஹீரோ, படத்தின் பட்ஜெட்டை பாதி படம் முடிந்த நிலையில் அதிகப்படுத்தியதாகப் புகார் கூறினார்.

கடுமையாகச் சாடினார்

கடுமையாகச் சாடினார்

இதையடுத்து விழா ஒன்றில் பேசிய இயக்கம், அந்த ஹீரோவை கடுமையாகச் சாடினார். தன் தாயை தவறாகப் பேசியதாகக் கூறினார். அவருக்கு ஆதரவாக சில இயக்குனர்களும் ஒன்று சேர்ந்தனர். இந்நிலையில் அந்த இயக்கம் வேறு ஹீரோவை வைத்து படம் இயக்கச் சென்றுவிட்டார். அதற்கான வேலைகளில் இருக்கிறார், இப்போது.

சமாதான கொடி

சமாதான கொடி

இந்நிலையில், தான் புகார் கூறிய ஹீரோவை, பாசத்தைப் பொழிய ஆரம்பித்திருக்கிறார் அந்த இயக்குனர். அப்படியே அந்த ஹீரோவுக்கு சமாதான கொடியை அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல். ஹீரோவும் தனது கோபத்தைக் கொஞ்சம் தளர்த்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அந்தப் படத்தில் அவர்கள் மீண்டும் இணையலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X