அந்த ஹீரோயினுக்கு அப்படி ரெக்கமண்ட் பண்றாராமே இந்த ஹீரோ.. அவசரமாக பரவும் அப்படி இப்படி பேச்சு!
சென்னை: அந்த ஹீரோ, சமீப காலமாக அந்த இளம் ஹீரோயினுக்கு ரெக்கமன்ட் பண்ணுவதாகச் சொல்கிறார்கள், இன்டஸ்ட்ரியில்.
அந்த யதார்த்தமான நடிகர், கடும் போராட்டத்துக்கு பிறகு முன்னேறி இருக்கிறார், சினிமாவில்.
சிறந்த படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் அவருக்கு அக்கம் பக்கத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு.

பரபரப்புப் பேச்சு
அவருடன் சில வில்லேஜ் படங்களில் நடித்த அந்த நடிகையுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதாக சில வருடங்களுக்கு முன் பரவலானது, பரபரப்புப் பேச்சு. அதை நிரூபிப்பது போல இருவரும் மேலும் சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தார்கள், கொஞ்சம் நெருக்கமாக.

ரகசிய திருமணம்
ஒரு கட்டத்தில் இருவருக்குமான காதல் அதிகரித்துவிட்டதாம். எப்போதும் நடிகையின் வீட்டிலேயே நடிகர் தங்கும் அளவுக்கு பாசம் படுத்தி எடுத்து விட்டதாம். இதையடுத்து அந்த நடிகையை நடிகர், ரகசிய திருமணம் செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றார் என்கிறார்கள்.

பெயர் கெட்டுவிடும்
பிறகு நடிகருக்கு வேண்டிய இயக்குனர் ஒருவரும் வேறொரு ஹீரோ ஒருவரும் இந்த வயசுல இது தேவையில்லை, பெயர் கெட்டுப்போகும் என்று தடுத்ததாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே திருமணமாகிவிட்ட அந்த நடிகரின் வீட்டில் தலைதூக்கியதாம், பிரச்னை.

அதிக சிபாரிசு
பிறகு அது ஒரு வழியாகப் பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். இந்நிலையில் இப்போது அந்த நடிகர் பற்றி வேறொரு பேச்சு பேசப்பட்டு வருகிறது. அந்த நடிகர், வட இந்திய இளம் நடிகை ஒருவருக்குத் தன் படங்களில் நடிக்க அதிகமாகச் சிபாரிசு செய்வதாகச் சொல்கிறார்கள்.

ஒரு படத்தில்
அந்த வட இந்திய நடிகை, தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். அதிர்ஷ்டத்துக்கு மறுபெயரை கொண்ட அந்த நடிகை, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அந்த நடிகருடன் ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார். அதற்குள் இரண்டு படங்களில் நடிக்க சிபாரிசு செய்திருக்கிறாராம் நடிகர்.

என்ன திறமை?
இவர் சிபாரிசு பண்ணும் அளவுக்கு அந்த நடிகையிடம் அப்படி என்ன நடிப்புத் திறமை இருக்கு? என்று கேட்கிறார்களாம், அந்த நடிகருடன் ஏற்கனவே நடித்துள்ள சில நடிகைகள். சரிதானே? என்கிற சில இயக்குனர்கள் பஞ்சாயத்து ஆகாமல் இருந்தால் சரி என்கிறார்கள், நடிகர் மேல் உள்ள அக்கறையில்.


Click it and Unblock the Notifications











