இதெல்லாம் ஓவரால்ல இருக்கு..லக்கி ஹீரோயின் மூச்சுக்காட்டாம இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறாராம்ல!
சென்னை: மூச்சுக்காட்டாமல் அந்த லக்கி ஹீரோயின் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
தமிழில் அந்த ஹீரோயின் நடித்து ஒரே ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதுவும் தெலுங்கில் இருந்து இறக்குமதியான படம்.
அடுத்து அந்த கைதி நடிகருடன் நடித்திருக்கிறார், ஒரு படத்தில். இன்னும் அது ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் தமிழில் சில டாப் ஹீரோ படங்களுக்கு அவரை பேசி வருகின்றனர்.

சோதனை
பிரகாச நடிகர் படத்தில் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள். தெலுங்கில் மொத்தம் நான்கு படத்தில்தான் நடித்திருக்கிரார், அந்த ஹீரோயின். நான்கும் ஹிட். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் பாபு ஹீரோவுடன் நடித்து வெளியான படமும் ஹிட். கர்நாடகாவில் உள்ள இவரது வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதத்துக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.

கணக்கில் வராத பணம்
வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் கணக்கில் வராத பணம் கத்தை கத்தையாக இருந்ததாகவும் அதை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அந்த நடிகை, விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரிய வந்தது.

லக்கி ஹீரோயின்
இந்த இளம் வயதிலேயே இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி என்று ஆச்சரியப்பட்டார்கள் அதிகாரிகள். இந்நிலையில் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் இவரை, லக்கி ஹீரோயின் என்றார்கள். இந்நிலையில் அவர் தனது சம்பளத்தை கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று உயர்த்தி இருந்தார். இப்போது இன்னொரு முடிவையும் எடுத்திருக்கிறாராம்.

சிறு பட்ஜெட்
அதாவது, இனி சின்ன ஹீரோ படங்களிலும் சிறு பட்ஜெட் படங்களிலும் நடிப்பதில்லை என்பதுதான் அது. ஆரம்பத்தில் சின்ன படங்களில் நடித்துதான் அடுத்தடுத்த லெவலுக்கு வந்தார் நடிகை. ஆனால், இப்போது பெரிய ஹீரோக்கள் படங்களில் வாய்ப்புகள் வருவதால், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

டாப் லெவல்
சமீபத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படத்துக்கு அவரிடம் பேசியபோது நடிகையின் இந்த முடிவு தெரியவந்ததாம். அதோடு, சில ஹீரோயின்கள் எப்படி இன்னும் டாப் லெவலிலேயே இருக்கிறார்கள் என்று சில சினிமா மானேஜர்கள், லிஸ்ட் போட்டு விளக்க, தானும் தமிழ், தெலுங்கில் டாப் லெவலுக்கு வருவதற்காக இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











