காதல், அந்த காதலன், கல்யாணம்... ச்சே... உயர ஹீரோயின் டென்ஷன்... தயாரிப்பாளர் அதிர்ச்சி
சென்னை: காதல், திருமணம் விவகாரம் என்பதால் ஹீரோயின் டென்ஷனாகியுள்ளார். இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உயரமான அந்த ஹீரோயின் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் கலக்கியவர். அங்க கொஞ்ச நாள், இங்க கொஞ்ச நாள் என்று விமானத்திலேயே பாதி நாட்களை கழித்தவர்.
உச்ச நடிகரில் இருந்து, சிங்க நடிகர் வரை எல்லா முன்னணி ஹீரோக்களுடனுடன் நடித்து விட்டார் அந்த ஆறடி நடிகை.

ஹீரோவுடன் காதல்
அவருக்கு டோலிவுட்டின் அந்த உயரமான நடிகருக்கும் காதல் என்று காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள். கேட்டால், இருவருமே, நாங்க நண்பர்கள் என்று கூலாக மறுத்து விடுகிறார்கள்.

கெமிஸ்ட்ரி
ஆனால், இருவரின் ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவ்வளவு பொருத்தம் என்பது இன்டஸ்ட்ரி கணிப்பு. வயது ஏறிக்கொண்டே போனாலும் இருவருமே திருமணம் செய்துகொள்ளாததால், 'உங்களுக்குள்ள என்னதாங்க நடக்குது?' என்று கேட்காத ரசிகர்கள் இல்லை.

மழுப்பல் பதில்
இதுபற்றி ஒவ்வொரு மீடியா சந்திப்பின்போதும், தானாக இப்படியொரு கேள்வி வந்துவிடும். ஆனால், பதில் மட்டும் மழுப்பலாக வரும். இந்நிலையில் ஹீரோயின் நடித்துள்ள படம் ஒன்று இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது.

புரமோஷன் நிகழ்ச்சி
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஹீரோயினை அழைத்தால், மாட்டேன் என்கிறாராம். 'எல்லோரும் என்னோட காதலையும் கல்யாணத்தையும் பற்றியே பேசுவாங்க. ச்சே எரிச்சலா வருது. அதனாலதான்' என்று காரணம் சொல்கிறாராம். இந்த பதிலால் தயாரிப்பாளர் அப்செட் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











