அடிக்கடி ஃபாரின் பறக்கும் நடிகை..அழகைக் கூட்ட சர்ஜரி பண்ணியிருக்காராம்..அதனாலதான் அந்த மாற்றமாம்!
சென்னை: அந்த உசர நடிகை, சத்தம் போடாமல் சர்ஜரி பண்ணியிருப்பதால்தான் அந்த மாற்றம் என்கிறார்கள்.
சினிமாவில் பல நடிகைகள் சர்ஜரி செய்து தங்களது இயல்பான உறுப்புகளை மாற்றியிருக்கிறார்கள்.
முன்னாள் ஹீரோயின் மறைந்த மயிலு முதல் சமீபத்திய உலகநாயகன் மகள் வரை இதற்கு உதாரணம் உண்டு.

காலம் குறைவு
அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் அந்த உயர நடிகை. சினிமாவில் ஹீரோயின்களுக்கான காலம் குறைவுதான். சில நடிகைகள் மட்டுமே பல வருடங்கள் தாக்குப் பிடித்து நடிக்கின்றனர். அதற்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் அவசியம். ஒவ்வொரு மொழி சினிமாவிலும் ஒவ்வொரு வாரமும் புது புது ஹீரோயின்கள் இறக்குமதி ஆகின்றனர்.

போட்டி அதிகம்
இதனால் ஹீரோயின்களுக்குள் போட்டி அதிகம். திறமை இருக்கும் நடிகைகள் சத்தம் போடாமல் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க, சிலர் பட வாய்ப்புக்காக, போட்டிகளில் குதிக்கிறார்களாம். இது சினிமாதுறைகளில் காலங்காலமாக நடக்கும் விஷயம்தான். மற்ற நடிகைகளுக்கு வரும் வாய்ப்புகளை எப்படியாவது கைப்பற்றி அதில் நடிப்பது, இந்த போட்டியில் ஒரு வகை.

ஃபாரின் பறக்கிறார்
அந்த உயர நடிகையை, ஹார்ஸூடன் ஒப்பிடுவார்கள். தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அவர், பின்னர் அக்கம் பக்கத்து மாநிலங்களுக்குப் போனார். பிறகு தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்தாலும் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. ஆனாலும் நடிகை அடிக்கடி ஃபாரின் பறப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

வாய்ப்பு வரவில்லை
அங்கிருந்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எவ்வளவு கிளாமராக இறங்க முடியுமோ, அவ்வளவு இறங்கி போட்டோஷூட் நடத்தியும் பெரிதாக வாய்ப்பு இல்லை. இதனால், யாரோ சொன்னார்கள் என்பதற்காக தனது மூக்கை சர்ஜரி செய்து மாற்றி இருக்கிறாராம்.

ரசிகர்கள் வருத்தம்
அதனால்தான் அவர் முகத்தில் அந்த மாற்றம் தெரிகிறது என்கிறார்கள். மூக்கு ஆபரேஷன் பண்ணிய பிறகாவது வாய்ப்புகள் கிடைக்குமா என்று காத்திருக்கிறாராம். ஆனால் அவர் நேரமோ என்னமோ தெரியவில்லை. 'முதல்லயாவது நல்ல லுக் இருந்தது, இப்ப சுத்தமா வேற லுக்குக்கு நடிகை வந்துட்டாரு, எப்படி கிடைக்கும்? என்று வருத்தப்படுகிறார்கள், நடிகைக்கு வேண்டியவர்கள்.


Click it and Unblock the Notifications











