எல்லை மீறும் பிரச்னை.. என்ன செஞ்சாலும் கேட்க மாட்டேங்குதே..ஓவர் ஃபீலிங்கில் உருகும் அந்த ஹீரோயின்!
சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை என்பது போல இப்படியொரு சிக்கலில் இருக்கிறாராம் அந்த ஹீரோயின்.
உடலை கண்ணும் கருத்துமாக மெயின்டெயின் பண்ணுவதில், ஹீரோயின்கள் வேற லெவல்.
மேக்கப்புக்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் அதிகம் செலவழிப்பவர்கள் அவர்கள்.

வாய்ப்புகள் பறிபோகும்
ஏனென்றால் அவர்களுக்கு அதுதான் மூலதனம். உடல் எடை அதிகரித்தாலோ, குறைந்தாலோ பட வாய்ப்புகள் பறிபோகும் நிலை இருக்கிறது. சமீபத்தில் கூட ஓவராக ஒல்லியானதால், அந்த இந்திப் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார், தேசிய விருதுபெற்ற அந்த ஹீரோயின். இதனால் உடலை அப்படி ஜில்லென்று வைத்துக்கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுவார்கள்.

இளம் ஹீரோயின்
சில ஹீரோயின்கள் திருமணம் ஆனாலும் உடலை அப்படியே மெயின்டெயின் பண்ணி வருகிறார்கள். சிலரால் அது முடிவதில்லை. உடல் எடை அதிகரித்து ஆளே யாரோ போல தெரிவார்கள். இதற்கு பல முன்னாள், இந்நாள் ஹீரோயின்களை உதாரணமாகச் சொல்ல முடியும். இது ஒரு புறம் இருக்க, இளம் ஹீரோயின் ஒருவர், வேறு மாதிரி சிக்கலில் இருக்கிறார்.

ஏறிவிடுகிறது
அதாவது என்ன செய்தாலும் உடல் எடையை கன்னா பின்னாவென்று எகிறிவிடுகிறதாம். சாப்பாட்டை குறைத்து, டயட்டை மெயின்டெய்ன் பண்ணி, ஸ்ட்ரிக்ட்டாக எல்லாவற்றையும் கடைபிடித்தாலும் அடுத்த ஒரு வாரத்திலேயே மீண்டும் ஜில்லென்று ஏறிவிடுகிறதாம், உடல். இது ஏன், எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்று விழுந்து, படுத்து, புரண்டு யோசனை செய்து வருகிறாராம் அந்த நடிகை.

மலையாள நடிகை
பிரபலமான பழைய பாடல் ஒன்றின் வரியை டைட்டிலாக வைத்த படத்தின் மூலம், தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், அந்த மலையாள நடிகை. அந்த கவுதம இயக்குனர் இயக்கி இருந்த படம் அது. அந்தப் படத்திலேயே சரியாக நடிக்கவில்லை என்று அந்த ஹீரோயினை சிலர் சொல்ல, வருத்தப்பட்டிருந்தார், அவர்.

வருத்தம்
பிறகு மேலும் சில வாய்ப்புகள் வர, உடலை குறைக்கச் சொன்னார்களாம் எல்லோரும். ஆனால், அவர் மட்டுமல்ல எவர் பேச்சையும் அவர் உடல் கேட்பதில்லை என்பதுதான் பிரச்னையாம். இப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்றாலும் அந்த உடல் எடைதான், நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளிப் போக காரணமாக இருக்கிறது என்று வருத்தப்படுகிறாராம் நடிகை.


Click it and Unblock the Notifications











