அட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா? கடுப்பில் பிரபலங்கள்!
மும்பை: ஒட்டுமொத்த பாலிவுட்டையே அந்த நடிகை கூண்டில் ஏற்றத் துடிக்க அந்த விஷயம் தான் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதிலும், குறிப்பா அந்த பிரபலத்தை அவர் டார்கெட் செய்ய பெரிய காரணம் ஒன்றும் இருக்கிறதாம்.
அதற்காகத் தான் கேடயமாக சமீபத்தில் மறைந்த நடிகரை பயன்படுத்திக் கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

நடிகரின் கைப்பாவை
ஆரம்பத்தில் அந்த சூப்பர் ஹீரோ நடிகரின் கைப்பாவையாகத் தான் இந்த நடிகை இருந்து வந்துள்ளார். பெரிய நடிகர்கள் படத்தில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த சூப்பர் ஹீரோவை மயக்கி, பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை அவர் பிடித்துக் கொண்டார். பின்னர், அவருடன் மோதல் ஏற்படவே அவரை விட்டு பிரிந்து சென்றார்.

பிளாக் லிஸ்ட்
தன்னை விட்டு நடிகை பிரிந்து சென்ற நிலையில், சூப்பர் ஹீரோ சில காய்களை நகர்த்த, ஒட்டுமொத்த பாலிவுட்டும் அவரை பிளாக் லிஸ்ட் செய்து விட்டது. அதில், முக்கிய பங்காற்றியது அந்த பிரபல தயாரிப்பாளர் தானாம். அதனால், தான் தற்போது அவர் மீது தனது கோபக் கனலை கொட்டி வருகிறார்.

என்ன லாபம்
மறைந்த இளம் நடிகருடன் இணைந்து படங்கள் பண்ணவில்லை, அவருடன் நெருங்கிய தொடர்பிலும் இல்லை. ஆனால், அவரது மரணத்துக்காக வரிந்துக் கட்டிக் கொண்டு தொண்டை தண்ணி வற்றும் அளவுக்கு தொடர்ந்து போராடுவதில், அந்த நடிகைக்கு என்ன லாபம் என்ற கேள்வியும் சமூக வலைதளத்தில் அவ்வப்போது எழத்தான் செய்கிறது.

பழிக்குப் பழி
நெப்போடிசம் சர்ச்சையை கிளப்பி அந்த பிரபலத்தை கோர்த்து விட நினைத்து மறைந்த நடிகரின் மரணத்தை கையில் எடுத்த அந்த நடிகைக்கு, இப்போ மிகப்பெரிய ஆயுதமாக போதை பொருள் விவகாரம் சிக்கி இருக்கிறது. தனக்குப் பிடிக்காத பல பாலிவுட் பிரபலங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி பழிக்குப் பழி வாங்க நடிகை துடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அவர் மட்டும் ஒழுங்கா
சினிமா உலகம் என்றாலே குடியும் கும்மாளமுமாகத்தான் இன்றளவும் இருந்து வருகிறது என்றும், அந்த நடிகை மட்டும் பார்ட்டிகளுக்கு சென்றதில்லையா? அவர் மப்பாகி மயங்கி கிடக்கும் எத்தனையோ புகைப்படங்களும், வீடியோ ஆதாரங்களும் தங்களிடமும் உள்ளது என ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு, ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் வேட்டு வைக்க முடிவு செய்துள்ளதாக மும்பை கோடாங்கி வாட்ஸப் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











