எல்லாம் அந்த இயக்குநர் கால் வைத்த நேரம் தானாம்.. வெற்றி பட நிறுவனத்துக்கு அடுத்தடுத்த சறுக்கல்?

சென்னை: தொடர்ந்து படங்களை வெளியிட்டு வெற்றிப் படங்களாக மாற்றி வந்த அந்த நிறுவனம், தெரியாத் தனமாக அந்த இங்கிலிஷ் இயக்குநருக்கு உதவி செஞ்ச நேரம் அடுத்தடுத்த சறுக்கலை அந்த வெற்றிப் பட நிறுவனம் சந்தித்து வருகிறதாம்.

ஏற்கனவே மாஸ்க் படத்துடன் முன்னாள் மாஸ்க் நடிகரின் படத்தை போட்டிக்கு ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்த அந்த நிறுவனம் கடைசியில் ரிலீஸ் ரேசில் பின் வாங்கியது.

தற்போது பண்டிகை தினத்துக்கு இறக்க முடிவு செய்திருந்த அந்த காமெடி படத்தையும் இறக்க முடியாமல் தவித்து வருகிறது.

இங்கிலீஷ் இயக்குநர்

இங்கிலீஷ் இயக்குநர்

தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறேன் என்ற பெயரில் ஏகத்துக்கும் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் பல படங்களை தொடர்ந்து காவு வாங்கிய அந்த இங்கிலீஷ் இயக்குநர் அந்த புல்லட் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக புலம்பி தவித்தார்.

சொந்தக்கார ஹீரோ

சொந்தக்கார ஹீரோ

சொந்தக்கார பையனை மாஸ் ஹீரோவாக மாற்றுகிறேன் என அந்த மாஸ் ஹீரோவுக்காக உருவாக்கிய அந்த அத்யாய கதையை பட்டி டிங்கெரிங் பார்த்து அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு சொல்லி மண்டையை கழுவியுள்ளார் அந்த இயக்குநர். அந்த தயாரிப்பாளரும் சரி உங்க பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன் என அவரை நம்பி இறங்க அப்ப ஆரம்பிச்சது தான் எல்லாம் என்கின்றனர்.

மொத்தமும் நஷ்டம்

மொத்தமும் நஷ்டம்

அந்த ஒல்லிபிச்சான் நடிகர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கிராமத்து படம் ஃபயரில் அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஏகத்துக்கும் ஓட வைப்பார்கள் என்று போட்ட அத்தனை கணக்குகளும் படம் வெளியான முதல் நாளிலேயே சுக்கு நூறாக உடைந்து மொத்தமும் நஷ்டம் அடைந்துள்ளது.

வேட்டியில ஓணான்

வேட்டியில ஓணான்

வேலியில போன ஓணான வேட்டிக்குள்ள விட்ட மாதிரி, இப்போ அந்த தயாரிப்பு நிறுவனம் தவித்து வருகிறது. அதற்கு அடுத்து அந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியாக இருந்த இரண்டு படங்களும் எப்போது ரிலீசாகும் என்ற தேதி கூட தெரியாமல் தள்ளிப் போயுள்ளது.

கடுப்பில் இளம் இயக்குநர்

கடுப்பில் இளம் இயக்குநர்

அந்த இங்கிலீஷ் இயக்குநரை நம்பி தனது இரண்டாவது படத்தை இயக்கிய அந்த இளம் இயக்குநர் மூன்றாவது படத்தை இயக்கி முடித்து ரிலீசுக்கு காத்திருக்கிறார். ஆனால், இன்னமும் தனது இரண்டாவது படத்தை அந்த இங்கிலீஷ் இயக்குநர் ரிலீஸ் செய்யவில்லையே என செம்ம கடுப்பில் இருக்கிறார்.

லவ்வர்ஸ் டே

லவ்வர்ஸ் டே

லவ்வர்ஸ் டேக்கு அந்த சொந்தக்கார பையனின் மாஸ் படம் வெளியாகும் என அப்டேட்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த படமும் சொன்ன தேதிக்கு ரிலீசாகுமா? ஆகாதா? என்பது தெரியாமல் தற்போது படக்குழு திண்டாடி வருகிறதாம். ஏற்கனவே அன்றைய தினத்தில் பல பெரிய திரைப்படங்கள் போட்டி ரிலீசாகவுள்ளதால், அந்த படமும் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவது கஷ்டம் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X