அந்த ஹீரோயினுக்கு இவ்ளோ சொத்தா? அதிகமா நடிக்கலை, சம்பளமும் கம்மி.. ஆச்சரியத்தில் அதிகாரிகள்!
சென்னை: அந்த நடிகை வாங்கி குவித்துள்ள சொத்துக்களை கண்டு அதிர்ச்சியில் இருக்கிறார் களாம் அதிகாரிகள்.
சினிமாவில் நடிகைகளுக்கான காலம் குறைவுதான். சில வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக தொடர முடியாது.
சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான நடிகைகள் அப்படித்தான். பிறகு அக்கா, அண்ணி, கேரக்டரில் நடிக்கத்தான் அழைப்பு வரும்.

சொத்துக்களில் முதலீடு
அதனால் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள' தொடங்கி விடுவார்கள். பல நடிகைகள், கிடைக்கும் பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர். சில நடிகைகள், கணக்கு வழக்கில்லாமல் சொத்துக்களை வாங்கி குவித்துவிடுவார்கள். சிலர், சிட்டிக்கு ஒரு வீடு என வைத்திருக்கிறார்கள்.

திடுக் தகவல்கள்
ஒரு சில நடிகைகள், ரியல் எஸ்டேட் பிசினஸில் கூட ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பக்கத்து மாநிலத்தில் போதை வழக்கில் கைதாகி இருக்கும் அந்த நடிகைகளை தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள், அதிகாரிகள். அதில் அவர்களுக்கும் போதைப் பொருள் விநியோகிப்பவர்களுக்குமான தொடர்பு பற்றி திடுக் தகவல்கள் கிடைத்திருக்கிறதாம்.

சொத்துக் கணக்கு
இதில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் லிங்க் இருப்பதால் விசாரணை தொடர்கிறது. இதற்கிடையே, அந்த இரண்டு நடிகைகளில் ஒருவரின் சொத்துக் கணக்கு, ஆச்சரிய பட வைத்திருக்கிறது அதிகாரிகளை. அந்த நகரத்தில் மட்டும் 10 பிளாட்கள் இருக்கிறதாம் நடிகை பெயரில்.

அதிக படங்களில்
போதைப் பொருள் விற்றதால் கிடைத்த பணத்தில் இவற்றை வாங்கி இருப்பதாக சந்தேகப்படுகிறார்களாம் அவர்கள். இந்த வழக்கு அப்படியே அமலாக்கத்துறைக்கு செல்ல, அவர்கள் பிடியை இறுக்க இருக்கிறார்கள். அந்த நடிகை அதிக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

சம்பளம் குறைவு
பக்கத்து மாநில சினிமாதுறை சின்ன ஏரியா என்பதால், அவர்கள் கொடுக்கும் சம்பளமும் குறைவுதான். பிறகு எப்படி இவ்வளவு சொத்துக்கள் என்பது அதிகாரிகளின் கேள்வி. இதற்கிடையே நடிகைக்கும் சில அரசியல் புள்ளி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended Video

வெளிநாட்டு டூர்கள்
அந்த அரசியல் புள்ளியுடன் நடிகை வெளிநாட்டு டூர்களுக்கும் சென்று வந்திருக்கிறாராம். சொத்துக் கணக்கு பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை விசாரணையை இன்னும் ஆரம்பிக்கவில்லையாம். போதை வழக்கு முடிந்து, இந்த வழக்குக்கு வந்தால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், இப்போதே தவிக்கிறாராம் அந்த நடிகை.


Click it and Unblock the Notifications











