வெளிச்சத்துக்கு வரும் பழைய விஷயங்கள்.. 'வாய்ப்பு போயிருமோ?' பதைபதைப்பில் அந்த டாப் ஹீரோயின்!
சென்னை: தனது பழைய விஷயங்கள் இப்போது திடீரென வெளியே வருவதால் பதைபதைப்பில் இருக்கிறார் அந்த டாப் ஹீரோயின்.
கடவுளில் தேசத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த நடிகையை, தமிழுக்கு அழைத்து வந்து சின்ன கேரக்டரில் நடிக்க வைத்தார்கள்.
பாலிவுட்டிலும் நடித்திருக்கிறார் அந்த நடிகை. தமிழில் சில படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்தவருக்கு, எதிர்பார்க்காமல் அடித்தது லக்.

தண்ணீர் ஊற்றி
அந்த டாப் ஹீரோ படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. திக்குமுக்காடி போனார் நடிகை. அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நடிகை, தன்னை அதை வைத்தே பக்காவாக புரமோட் பண்ண நினைத்தார். அதற்கான வேலைகளிலும் இறங்கினார். அவர் எண்ணத்தில் எழுந்த தீயை, தண்ணீர் ஊற்றி அணைத்திருக்கிறது கொடூர கொரோனா.

நம்பர் நடிகை சாயல்
அந்த டாப் ஹீரோ படம் ரிலீஸ் ஆகி இருந்தால் இதற்குள் நான்கைந்து படம் கையில் இருக்கும் என்று நினைத்தாராம். ஆனால், அப்படி எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை காலம். நம்பர் நடிகையின் சாயலை, கொஞ்சம் அப்படி இப்படி கொண்டிருக்கும் அந்த நடிகை, இதனால் கவலையில் இருந்தார். யாருக்குத்தான் இல்லை கவலை?

ஒல்லி ஹீரோ
இதற்கிடையே அவருக்கு ஆறுதலாக, கிடைத்தது மற்றொரு வாய்ப்பு. அந்த ஒல்லி ஹீரோ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகை. கொரோனா வைரஸ் காலத்திலும் வாய்ப்பு தேடி வந்திருப்பதில் நடிகை ஹேப்பி. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவருக்குத் திடீர்
எதிரிகள் முளைத்திருக்கிறார்களாம் இப்போது.

எதிர்பார்க்காத எதிரி
சினிமாவில் எதிரிகளுக்குப் பஞ்சமே இல்லை என்றாலும் இந்த எதிர்பார்க்காத எதிரிகள் செய்யும் வேலைகளால் கலக்கத்தில் இருக்கிறாராம், அந்த ஹீரோயின். நடிகையின் புகழைக் கெடுக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்களாம் அந்த எதிரிகள். இது சில பொறாமை ஹீரோயின்களின் வேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறாராம்!

பொறாமை நடிகைகள்
ஏற்கனவே சில நடிகைகளுக்கு பொறாமை நடிகைகள் இப்படி செய்திருக்கிறார்கள் என்ற தகவல், ஹீரோயினுக்கு சென்றதால் இன்னும் அப்செட்டில் இருக்கிறாராம். வாய்ப்பை பறிப்பதையும் அந்த வாய்ப்பை எப்படி பெற வேண்டும் என்பதையும் சில நடிகைகள் தெரிந்து வைத்திருப்பதுதான் அவர் பயத்துக்கு காரணம் என்கிறார்கள்.

தவிக்கும் ஹீரோயின்
அதாவது அந்த நடிகை சினிமாவில் அறிமுகமாவதற்கு முன், வாய்ப்பு தேடுவதற்காக, கொஞ்சம் அதிக கிளாமராக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டிருந்தாராம். அதை தேடிப் பிடித்து சமூக வலைதளங்களில் இப்போது வெளியிட்டு வருகிறார்களாம் சிலர். முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் அந்தப் போட்டோஸால் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்றும் அதை எப்படி நீக்குவது என்று தெரியாமலும் தவிக்கிறாராம் ஹீரோயின்!


Click it and Unblock the Notifications











