கொரோனா லாக்டவுன் இப்படி ஆக்கிடுச்சே.. பல கோடிகளை இழந்த பிரபல ஹீரோயின்.. கவலையில் தூக்கம் போச்!

By

சென்னை: கொரோனா காரணமாக பல கோடிகளை இழந்துவிட்ட பிரபல ஹீரோயின் பெரும் கவலையில் இருக்கிறாராம்.

யாரும் எதிர்பார்க்காத கொரோனா வைரஸ், உலகையே கன்னாபின்னாவென ஆட்டிப் படைத்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவும் அதில் ஒன்று.

 நீட்டிக்கப்படுமா?

நீட்டிக்கப்படுமா?

நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பயத்தில் உள்ளனர். இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் இந்த மாத இறுதியுடன் முடிவடைய இருக்கிறது. அடுத்த மாதம் நீட்டிக்கப்படுமா? இல்லையா என்பது பற்றி அரசு அறிவிக்க இருக்கிறது.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட இந்த ஐந்து மாதமும் சினிமா துறை மொத்தமாக முடங்கிக் கிடக்கிறது. படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. தியேட்டர்களும் மூடப் பட்டுள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சிலர் கதைகள் கேட்டு வருகின்றனர். சில நடிகைகள் மற்ற மொழிகளைக் கற்று வருகின்றனர்.

 5 கோடி ரூபாய்

5 கோடி ரூபாய்

சில நடிகைகள், இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அப்டேட் பண்ணுவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹீரோயின் ஒருவர் ஐந்து கோடி ரூபாயை இந்த லாக்டவுனால் இழந்துவிட்டதாக வருத்தத்தில் இருக்கிறாராம். அந்த ஹீரோயின் தமிழில் கண்ணாடி இயக்குனரின் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த மாஸ் ஹீரோவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 கான் ஹீரோவுடன்

கான் ஹீரோவுடன்

ஆனால், தெலுங்கில் டாப்புக்கு சென்றுவிட்ட அவர், இப்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி நடிகருடன் அவர் நடித்த தெலுங்கு படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் மட்டுமே பாக்கி. அடுத்து இந்தியில் அந்த டாப் கான் ஹீரோவுடன் நடித்து வருகிறார். அவர் கேரியர் கிராப், இப்படி ஜிவ்வென்று ஏறிக்கொண்டிருந்த நிலையில்தான் கொரோனா அதற்கு பிரேக் போட்டிருக்கிறது.

அட்வான்ஸ் கொடுக்க

அட்வான்ஸ் கொடுக்க

இந்தியில் அந்த டாப் கான் படத்தை அடுத்து மேலும் சில படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஒப்பந்தத்துடன் அட்வான்ஸ் கொடுக்கக் காத்திருந்தார்களாம். அதற்குள் லாக்டவுன், இப்படி லாக் பண்ணிவிட, மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் போச்சே என்று தனக்கு வேண்டியவர்களிடம் வருத்தப்பட்டு சொல்லி இருக்கிறாராம் ஹீரோயின்.

கிடைக்குமோ, கிடைக்காதோ

கிடைக்குமோ, கிடைக்காதோ

இனி கால்ஷீட் குளறுபடி காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்குமோ, இல்லையோ என்பது தெரியவில்லை என்றும் ரொம்ப ஃபீல் பண்ணுகிறாராம். இது மாதிரி பல நடிகைகளுக்கு நடந்துள்ள நிலையில், இவர் மட்டும் ரொம்ப ஃபீல் பண்றாரே என்கிறார்களாம் சக நடிகைகள். அவரவர்களுக்கு அவரவர் கவலை. இந்த ஹீரோயினுக்கு இப்படியொரு கவலை என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X