அதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்!

By

சென்னை: ரிலீஸ் ஆகாமல் இருக்கும் அந்தப் படத்தை, இப்போது ரிலீஸ் செய்ய முயன்ற இயக்குனர் கம் நடிகர், நொந்து போயிருக்கிறாராம்.

அந்த முன்னாள் இயக்குனர், இப்போது காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் அவரைப் பார்க்க முடியும்.

பல வருடங்களாக சினிமாவிலேயே இருக்கும் அந்த இயக்குனர் கம் நடிகர், இயக்குனர்கள் சிலரைப் போல படத் தயாரிப்பில் இறங்கினார்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

அவர் தயாரிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் உருவானது, எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி மோசடி செய்து சம்பாதிக்கலாம் என்பதை கதையாகக் கொண்ட சதுரங்க படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனரே, இதன் ஸ்கிரிப்ட்டை எழுதி இருக்கிறார். அந்த முன்னாள் ஹீரோ நாயகனாக நடிக்க, நாயகியாக நடித்தார் அந்த ஷா நடிகை.

தமிழ்நாட்டு உரிமை

தமிழ்நாட்டு உரிமை

படம் முடிவதற்குள் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒரு வழியாக நெருங்கி வந்த நிலையில், இதன் தமிழ்நாட்டு உரிமையை விநியோகஸ்தர் ஒருவருக்கு கொடுப்பதாகக் கூறியிருந்தார், அந்த தயாரிப்பாளரான இயக்குனர். படத்துக்கு ஒரு தொகையை பேசி, அந்த விநியோகஸ்தர் 4 கோடி ரூபாயை அட்வான்சாக கொடுக்க, ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், படம் வெளிவரவில்லை.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

சின்ன சின்ன பைனான்ஸ் பிரச்னை என்று முதலில் கூறப்பட்டது. ஹீரோ உள்ளிட்ட சிலருக்கு சம்பளப் பாக்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையே, இப்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சினிமா துறை மொத்தமாக முடங்கி கிடக்கிறது. படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை. தியேட்டர்களும் திறக்கவில்லை. இதனால், படங்களை ஓடிடி-தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.

வெளியிட நினைத்தார்

வெளியிட நினைத்தார்

சில படங்கள் ஒடிடியில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பல படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தப் படத்தையும் ஒடிடி-யில் வெளியிட முயன்றார், அந்த தயாரிப்பாளரான இயக்குனர். அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அதாவது படத்துக்கு அந்த விநியோகஸ்தர் கொடுத்த அட்வான்ஸை தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டுப் படத்தை வாங்கி இவர் வெளியிட நினைத்தாராம்.

ரிலீஸ் நிலை

ரிலீஸ் நிலை

ஒடிடி தளம் ஒன்று படத்தை ஏற்றுக்கொண்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த தயாரிப்பாளரான இயக்கம், ரிலீஸ் முயற்சியில் இறங்கிய போதுதான் பல பரபரப்பு விஷயங்கள் தெரிய வந்தன. படத்தை வாங்கிய விநியோகஸ்தர், அந்தப் படத்தை வைத்து பலரிடம் கடன் வாங்கிவிட்டாராம். அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தால்தான் இதை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலை.

தவிக்கும் இயக்கம்

தவிக்கும் இயக்கம்

இதற்கிடையே, படத்துக்கு டப்பிங் பேச மறுக்கிறாராம், ஹீரோ. சம்பள பாக்கிக்கான உறுதி கொடுத்தும் பேச மறுக்கிறாராம். இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறாராம் அந்த இயக்கம். பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டிய தயாரிப்பாளர் சங்கமே, பஞ்சாயத்தில் இருப்பதாலும் யாரிடம் போய் முறையிட என தவித்து வருகிறார், அந்த இயக்கம் கம் நடிகர்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X