பட்ஜெட்டை குறைச்சாதான் ஷூட்டிங்.. நச்சென்று சொன்ன தயாரிப்பு..திடீரென தவிக்கும் நட்சத்திர இயக்கம்!

By

சென்னை: பட்ஜெட்டை குறைத்தால்தான் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க முடியும் என்று தயாரிப்பாளர் சொல்லி இருப்பதால் தவித்து வருகிறாராம் அந்த இயக்குனர்.

மொத்த சினிமாதுறையையும் கொரோனா குதறிப் போட்டிருப்பதால், தவித்து வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எந்த வேலையும் நடக்கவில்லை என்பதால், சினிமா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்நிலையில், கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், தங்கள் ஊதியத்தில் பாதியை குறைத்தால்தான் அடுத்த பணிகளைத் தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சில தயாரிப்பாளர்கள் லாக்டவுன் தொடங்கியதில் இருந்தே இதைக் கேட்டு வருகிறார்கள். ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான தயாரிப்பாளர்கள், பைனான்ஸ் வாங்கிதான் படம் தயாரிக்கிறார்கள்.

வட்டி எக்கச்சக்கம்

வட்டி எக்கச்சக்கம்

கையில் இருந்து யாரும் பணம் போடுவதில்லை. இப்போது படப்பிடிப்பில் உள்ள பெரும்பாலான படங்கள் அப்படித்தான் எடுக்கப்பட்டு வருகின்றன. கோடிகளில் வாங்கும் பைனான்ஸுக்கு வட்டியும் எக்கச்சக்கம். கொரோனா வைரஸ் காரணமாக, படங்களின் ரிலீஸ் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு இருக்காது என்கிறார்கள்.

சம்பளக் குறைப்பு

சம்பளக் குறைப்பு

அதனால், மொத்த பணமும் முடங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள், தங்கள் படத்தில் நடித்துள்ள ஹீரோக்களிடம் சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டு வருகின்றனர். சில பைனான்சியர்கள் வட்டியை குறைக்க முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, அந்த கிளாஸ் இயக்குனரிடம் அதன் தயாரிப்பாளர்கள், இனி பட்ஜெட்டை குறைத்தால்தான் ஷூட்டிங் தொடங்க முடியும் என்று கூறி இருக்கிறார்களாம்.

வரலாற்று நாவல்

வரலாற்று நாவல்

அந்த இயக்குனர், இப்போது அந்த வரலாற்று நாவலைப் படமாக எடுத்துவருகிறார். யாரும் எதிர்பார்க்காத கோடிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு செலவு ஓவராக செல்வதாக ஏற்கனவே தகவல். இப்போது அந்த வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் இப்படி சொல்லிவிட்டதால், எதை எப்படி குறைக்கலாம் என்று யோசித்து வருகிறாராம் இயக்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X