ரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்காங்களாமே.. ஹீரோயினை அடுத்து அவர் காதலரான ஹீரோவுக்கும் கொரோனாவாம்!

By

சென்னை: தனக்கு கொரோனா என்று அறிவித்த அந்த நடிகையின் காதலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும் இதன் தாக்கம் குறையவில்லை.

இந்தியா முழுவதும் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

இந்தக் கொரோனா தொற்றில் பிரபல நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். சமீபத்தில் சில பாலிவுட் பிரபலங்கள், தமிழ் ஹீரோ ஒருவர், தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் உட்பட பலர் இதில் சிக்கினார்கள். பின்னர் சிலர் மருத்துவமனையிலும் சிலர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றனர். பிறகு மீண்டுவிட்டதாக தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் அறிவித்தார்கள்.

பாசக்கார வைரஸ்

பாசக்கார வைரஸ்

என்னதான் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருந்தாலும் பாய்ந்து வந்து தாக்குகிறது, இந்த பாசக்கார வைரஸ் தொற்று. தமிழ், சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த கன்னட ஹீரோயினுக்கும் கொரோனா தொற்று பரவியது. ஒரு வாரமாக அடித்த காய்ச்சலை அடுத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார் நடிகை. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஹீரோவுடன் காதல்

ஹீரோவுடன் காதல்

இதை தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் அறிவித்தார் நடிகை. 'இந்த காலகட்டம் ரொம்ப முக்கியம். கைகளை கழுவுங்க, மாஸ்க் அணிஞ்சுட்டு போங்க, கைகளை அடிக்கடி கழுவுங்க என்று ஏகப்பட்ட அட்வைஸும் செய்திருந்தார். இந்த நடிகையும் தமிழ், தெலுங்கில் நடித்துவரும் அந்த ஹீரோவும் காதலித்து வருகிறார்கள் என்பது கோலி, டோலிவுட் டாக்.

ஏன் செல்ல வேண்டும்

ஏன் செல்ல வேண்டும்

இதற்காக ஆதாரமாக, கொரோனா தீவிரமாக இருந்த கடந்த மாதம் நடிகரின் அப்பாவுக்கு, பர்தே டே பார்ட்டி நடந்தது. இதில் சொந்தங்கள் தவிர வெளியில் இருந்து அந்த நடிகை மட்டுமே கலந்து கொண்டதைச் சொல்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் யாரும் யாரையும் சந்திப்பதையே மறுக்கும் நிலையில், ஐதராபாத்தில் உள்ள நடிகரின் வீட்டுக்கு, சென்னையில் இருந்து அந்த நடிகை மட்டும் ஏன் செல்ல வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

ஹீரோவுக்கும் பாதிப்பு

ஹீரோவுக்கும் பாதிப்பு

இதனால் அது காதல்தான் என்கிறார்கள். இதுபற்றி இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில், நடிகையுடன் அந்த ஹீரோவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம். தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நடிகர், அதுபற்றி வெளியில் சொல்லாமல் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X