தினமும் 10 டேக், 20 டேக்... அசத்தும் ஹீரோயினுடன் டான்ஸில் அல்லாடும் ஹீரோ... லேட்டாகும் ஷூட்டிங்

By

சென்னை: அந்த இளம் ஹீரோயினுடன் சரியாக நடனம் ஆட முடியாமல் ஹீரோ திணறுவதால் ஷூட்டிங் லேட் ஆவதாகச் சொல்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் அந்த பிரபல ஹீரோயினின் கணவர், அந்த ஹீரோ. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ஹீரோ, பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், எப்போது ஷூட்டிங் வந்தாலும் வரவேற்பு தடல் புடலாக இருப்பது வழக்கம்.

நடன மிரட்டல்

நடன மிரட்டல்

அந்த ஹீரோ இப்போது, காதல் கதை என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அதில் அவருக்கு ஜோடி, அந்த மலர் டீச்சர். சும்மாவே நடனத்தில் கலக்கும் அந்த நடிகை, அதை வைத்துதான் சினிமாவுக்கே வந்தார். டிவி நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளும் நடனத்தில் மிரட்டியிருப்பவர், நடிகை. அவர் நடனத்தை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

ஆஹோ ஓஹோ

ஆஹோ ஓஹோ

இதற்கிடையே, ஒல்லி நடிகருடன் அந்த டீச்சர் நடிகை ஆடியிருந்த அந்த படத்தின், பேபி பாடல் ஆஹோ ஓஹோ ஹிட்டானதற்கு அவரது நடனமும் காரணம். நடிகைக்கு தமிழில் அதிக வாய்ப்பில்லை என்றாலும் தெலுங்கில் குவிகிறது. தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார், அங்கு. படத்தில் அவரது நடனத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

திணறும் ஹீரோ

திணறும் ஹீரோ

இப்போது அவர் நடிக்கும் படத்தை லவ் ஸ்பெஷலிஷ்ட் இயக்குனர், டைரக்‌ஷன் செய்து வருகிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் செட் அமைத்து நடந்து வந்தது. இப்போது பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். ஒரு பாடல் காட்சிக்கு வித்தியாசமான நடன அசைவுகளை வைத்திருக்கிறார்கள். வழக்கமாக, நடன காட்சிகளில் நன்றாக ஆடும் அந்த ஹீரோ, இந்தப் படத்தில் திணறுகிறாராம்.

தினமும் 20 டேக்

தினமும் 20 டேக்

காரணம் அந்த நடிகை. மியூசிக்கை போட்டதும் டான்ஸில் அவர் கலக்கி எடுக்க, இவருக்கு தடுமாற்றம் வந்து விடுகிறதாம். இவரது ஸ்டெப்பும் அவர் ஸ்டெப்பும் மேட்ச் ஆகவில்லையாம். இதனால் தினமும் 10 டேக், 20 டேக் என்று செல்ல, இயக்குனர் அப்செட் என்கிறார்கள். இதற்கிடையே, நடிகை அவர் லெவலுக்கு ஸ்லோவாகி பார்த்தும் சரியாக வரவில்லையாம். இதனால் படம் லேட் ஆகிறது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X