Just In
- 10 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 10 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 11 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 12 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவம்.. தங்கும் விடுதிக்கு சீல் வைத்த ஆட்சியர்
- Automobiles
3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் பட ஹீரோயினுக்கு இவ்வளவு கோடியா? ஓவரா இருக்கே.. ஆச்சரியத்தில் போட்டி ஹீரோயின்ஸ்!
சென்னை: பாலிவுட்டில் அறிமுகமாகும் அந்த நாயகியின் சம்பளத்தைக் கேட்டு சக நடிகைகள் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழில் அந்த ஹீரோயின் நடித்து ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் நடிகைக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
பிரபல ஹீரோவுடன் அவர் நடித்துள்ள படம், ஏப்ரலில் வெளியாக இருக்கிறது. வந்தால் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள்.
வெளியானது டீசர்.. அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது மோகன்லாலின் 'த்ரிஷயம் 2..' படக்குழு அறிவிப்பு

சொல்ல மாட்டார்
தெலுங்கில் இருந்து இறக்குமதியாகி இருக்கும் அந்த ஹீரோயின், அடுத்து ஒரு டாப் ஹீரோ படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆனால், படத்தின் தகவலை இப்போது சொல்ல மாட்டாராம். முதல் படம் ரிலீஸ் ஆன பிறகு சொல்கிறேன் என்கிறார்.

குவிகிறது வாய்ப்பு
அவர் இப்போது நடித்துள்ள ஹீரோவின் அண்ணனுடன் தான் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் பறக்கிறது கோலிவுட்டில். இதற்கிடையே தமிழில் மேலும் சில படங்களுக்கு அவருடன் பேசி வருகின்றனர். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் என்பதால் அவருக்கு அங்கும் குவிகிறது வாய்ப்பு.

உயர்த்தி இருந்தார்
டோலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை, இந்த வருட ஆரம்பத்தில் வெளியான படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதில், 20 சதவிகிதம் உயர்த்திவிட்டார். அதாவது ஒரு கோடியே 20 லட்சம் என்று. அதைக் கொடுக்கவும், தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மூச்சு விடாமல்
இப்போது, பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அந்த ஹீரோயின். இதுபற்றி மூச்சு காட்டாமல் இருந்த அந்த ஹீரோயினின் பாலிவுட் அறிமுகம், அவருடைய போட்டி நடிகைகளுக்கு எக்கச்சக்கப் பொறாமையை எக்குத்தப்பாக அதிகப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சீனியர் ஹீரோயின்
அவருடைய இந்த திடீர் வளர்ச்சி, சில சீனியர் ஹீரோயின்களுக்கும் வியப்பாகத்தான் இருக்கிறதாம். இதற்கிடையே, முதல் பாலிவுட் படமே ரிலீஸ் ஆகாத நிலையில், அடுத்த பாலிவுட் வாய்ப்பும் தேடி போயிருக்கிறது நடிகைக்கு. அதில் முதலில் நடிக்க இருந்தவர் வேறொரு நடிகை.

ஜிவ்வென ஏறிய
அவர் விலகியதால், இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாம். இதில் அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் வேறு இருக்கிறார் என்பதால், சக போட்டி நடிகைகளுக்கு ஜிவ்வென ஏறியிருக்கிறதாம் பொறாமைத் தீ. இதற்கிடையே நடிகையின் பாலிவுட் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

மயக்கம் வராத குறை
அதாவது, நடிகையின் இரண்டாவது பாலிவுட் படத்துக்கான சம்பளம் ஆறு கோடியாம். இதைக் கேள்விபட்டு சிலருக்கு மயக்கம் வராத குறையாம். இன்னும் முதல் படம் அங்கு ரிலீஸ் ஆகாத நிலையில் அவர், இப்போதுகூட அறிமுக நடிகைதான். அவருக்கு இவ்வளவு சம்பளம் ஓவராக இருக்கே? என்று வாய்ப்பிளக்கிறார்களாம்.