ஹீரோயின் கிடைக்கலை... வேற வழி இல்லைன்னு தெரிஞ்சதும் அந்த சீனியர் ஹீரோவுக்கு ஷாக் கொடுத்த நாயகி!
சென்னை: அந்த ஹீரோ படத்தில் நடிக்க, ஹீரோயின்கள் கிடைக்கவில்லை என்பதால், தனது சம்பளத்தை கன்னா பின்னாவென்று உயர்த்தி இருக்கிறாராம், அந்த ஹீரோயின்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வருகிறார் அந்த நம்பர் நடிகை. தெலுங்கில் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்பந்தமாகி இருந்தார்.
அவருடன் நடிக்க, பல ஹீரோயின்கள் மறுத்து வரும் நிலையில், நடிக்க சம்மதித்தார், இவர்.

விலகி விட்டார்
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் அந்த சீனியர் ஹீரோவுடன் நடித்திருக்கிறார், இந்த நடிகை. தனக்கும் வயதாகி விட்டதாலும் கேட்ட சம்பளம் கிடைக்கும் என்பதாலும் ஓகே சொன்னர் நடிகை. அக்ரிமென்ட் போட்டு, எல்லாம் முடிந்த நிலையில் ஷூட்டிங் போக வேண்டிய நேரத்தில், படத்தில் இருந்து விலகிவிட்டார். இதை பற்றி அறிவித்தும் விட்டார். இதனால் பரபரப்பானது திரையுலகம்.

சீனியர் ஹீரோ மகன்
அவர் திடீரென்று விலக, படத்துக்குள் இன்னொரு ஹீரோயின் வந்ததுதான் காரணம் என்றார்கள். அதாவது படத்தில் இளம் ஹீரோ ஒருவர் நடிக்கிறார். அந்த கேரக்டரில் நடிக்க டாப் ஹீரோ ஒருவரை கேட்டனர். கடைசியில் சீனியர் ஹீரோவின் மகனே அந்த கேரக்டரில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக, இப்போதைய டாப் ஹீரோயின் ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அகர்வால் நடிகை
அவர் கேரக்டரை பெரிதாக்கி, கதையையும் மாற்றினார்களாம். இதனால் அந்த ஹீரோயினுக்கான காட்சிகளை குறைத்து விட்டதாகத் தகவல். இது அந்த நடிகைக்கு தெரியவர, கடுப்பில் தயாரிப்பு மற்றும் இயக்குனரிடம் கோபமாகப் பேசிவிட்டு விலகிவிட்டார் என்கிறார்கள். இதையடுத்து அந்த மிட்டாய் கடை நடிகையிடம் பேசி வந்தனர்.

கால்ஷீட் இல்லையே
இவரும் அந்த ஹீரோவுடன் ஏற்கனவே நடித்திருக்கிறார். உடனடியாக ஒப்புக்கொள்ளாத நடிகை, சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்து கிறாராம். 'நான் அந்த படத்துல நடிக்கணுமே, இந்த படத்துல நடிக்கணுமே, கால்ஷீட் இல்லையே?' என்று கூறினாராம். பிறகு, இப்போது வாங்கும் சம்பளத்தை விட சில கோடிகளை அதிகமாகக் கேட்டு, இவ்ளோ தருவீங்களா, நான் கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம்.

வேறு வழி இல்லை
அவர் குறிப்பிட்டிருக்கிற சம்பளத்தைக் கேட்டு ஷாக் ஆன தயாரிப்பு, இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா? என்று யோசித்து வருகிறது. வேறு வழி இல்லாததால், கேட்ட தொகையை விட கொஞ்சம் குறைத்து அவரைதான் நடிக்க வைப்பார்கள் என்கிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











