அதுக்குள்ள எப்படி? அத்தனை கோடிக்கு அந்த ஹீரோயின் வாங்கிய ஆடம்பர பங்களா..ஆச்சரியத்தில் சக நடிகைகள்!

By

சென்னை: அந்த இளம் ஹீரோயின் வாங்கியுள்ள ஆடம்பரமான பங்களா பற்றிதான் பேச்சாக இருக்கிறது இன்டஸ்ட்ரியில்.

வாய்ப்புக் கிடைக்கும்போதே அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் சில ஹீரோயின்ஸ் உஷார்.

அப்படித்தான் பல நடிகைகள், சொத்துகளாக வாங்கி குவித்திருக்கிறார்கள். வசிக்கும் நகரத்தின் புறநகர் பகுதிகளில் சிலர் தோட்டங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த டார்க்கெட்

அடுத்த டார்க்கெட்

அந்த பார்முலாவை அப்படியே பின்பற்றுகிறாராம் சமீபத்தில் உச்சிக்கு வந்துகொண்டிருக்கும் அந்த ஹீரோயின். அந்த இளம் ஹீரோயின், கன்னடத்தில் இருந்து தெலுங்குக்குப் போனார். அவர் மீது டாப் ஹீரோக்களுக்கு கண். அங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகிவிட்ட அந்த ஹீரோயினின் அடுத்த டார்க்கெட், தமிழ் சினிமா!

ஏகப்பட்ட சொத்து

ஏகப்பட்ட சொத்து

கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நடிகையின் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்தது. பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், அவருக்குள்ள சொத்துப் பட்டியல்களை பார்த்து அசந்தே போனதாகச் சொன்னார்கள். கல்யாண மண்டபம், தேயிலை எஸ்டேட் என்று நடிகையின் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள்.

நடிகைக்கு பின்னால்

நடிகைக்கு பின்னால்

இந்நிலையில், அதிகாரிகளின் முன் சொத்துக்களுக்கு விளக்கம் அளித்துவிட்டு வந்தார் நடிகை. இந்த இளம் வயதிலேயே, எப்படி இத்தனை கோடி சொத்துச் சேர்த்தார் என்று உடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் ஆச்சரியமாம். நடிகைக்கு பின்னால் பெரிய சக்தி ஒன்று இருப்பதாகவும் பேசினார்கள் அப்போது.

யாரை பிடித்தால்

யாரை பிடித்தால்

தமிழில் கொம்பனோடு நடித்து வருகிறார், அந்த நடிகை. கொரோனா இல்லாமல் இருந்தால் அந்த படம் எப்போதோ ரிலீஸ் ஆகி இருக்கும். இந்நிலையில் தமிழிலும் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை எப்படி பிடிக்கலாம் என்று அதற்கான வேலையில் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரை லக்கி ஹீரோயின் என்றும் அழைக்கிறார்கள்.

அட்டகா பங்களா

அட்டகா பங்களா

அந்த நடிகை ஐதராபாத்தில் அட்டகாசமான பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறாராம் சமீபத்தில். இதன் மதிப்பு சில கோடிகள் என்கிறார்கள். ஐதராபாத்தில் இருந்து கொண்டு மற்ற மொழிகளில் கவனம் செலுத்துவது எளிதானது என்று வேண்டியவர்கள் கொடுத்த அட்வைஸ்தான் இதற்கு காரணமாம்.

பெரிய பட்ஜெட்

பெரிய பட்ஜெட்

ஏற்கனவே சில மும்பை ஹீரோயின்கள் சமீபத்தில் ஐதராபாத்தில் செட்டிலான நிலையில், இவரும் அவர்கள் வழியை பின்பற்றி இருப்பது மற்ற நடிகைகளுக்கு லைட்டா பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள். இன்னும் சிலர், அவர் மொத்தமாகவே 10 படங்களில்தான் நடித்திருப்பார். நடிகைகளுக்கான சம்பளமும் குறைவுதான். அதற்குள் எப்படி இவ்வளவு காஸ்டி பங்களா? என்று காதைக் கடிக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X