'அது வேற, இது வேற..' கல்யாணத்துக்குப் பிறகு அந்த கண்டிஷனை போடாத பிரபல ஹீரோயின்!

By

சென்னை: திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான ஹீரோயின்ஸ் போடும் அந்த தடையை இந்த ஹீரோயின் போடவில்லை என்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார், அந்த ஹீரோயின். தமிழைப் போலவே தெலுங்கிலும் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

இந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மூச்சு விடாத நடிகை

மூச்சு விடாத நடிகை

தெலுங்கு தயாரிப்பாளர் மகனும் இளம் ஹீரோவுமான ஒருவரை அவர் காதலிப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்ததை அடுத்து இந்த செய்தி வெளியானது. ஆனால், காதல் பற்றி மூச்சுவிடாத நடிகை, உண்மையில் காதலித்தது சினிமா தொடர்பில்லாத தொழில் அதிபரை.

முன்னும் பின்னும்

முன்னும் பின்னும்

காதலர் பற்றி அறிவித்த நடிகை, பிறகு அவரை திருமணம் செய்து கொள்வதாக அறிக்கை மூலம் அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு முன்னும் பின்னும் புகைப்படங்களாக வெளியிட்டு இன்ஸ்டாவை நிரப்பினார். இந்த திருமணத்தில் சினிமா தரப்பினர் யாருக்கும் அழைப்பில்லை.

சரியான பிறகு

சரியான பிறகு

திருமணம் முடிந்த கையோடு, தாங்கள் புதிதாக வாங்கிய வீட்டுக்கு குடியேறினர். பின் ஹனிமூனுக்கு அந்த தீவுக்கு சென்று வந்தனர். இதற்கிடையே, கொரோனா நிலைமை சரியான பிறகு ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடத்தவும் திட்டம் வைத்திருக்கிறாராம் நடிகை.

ஒட்டல் உரசல்

ஒட்டல் உரசல்

இது ஒரு பக்கம் இருக்கட்டும். வழக்கமாகத் திருமணம் முடிந்த நடிகைகள் நெருக்கமாக நடிக்க மாட்டார்கள், எப்போதும். காதல் காட்சிகளில் கூட அதிக ஒட்டல் உரசல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டு புரொடக்‌ஷன் மானேஜர்களை டென்ஷனாக்குவார்கள்.

ஓரிரு நாளில்

ஓரிரு நாளில்

இதற்கு முன் திருமணம் செய்துகொண்ட பின் நடிக்க வந்த பல நடிகைகள் அதை செய்தார்கள். ஆனால், இவர் அப்படி எந்த கண்டிசன்களையும் படக்குழுவுக்குப் பிறப்பிக்கவில்லை என்கிறார்கள். அந்த நடிகை தெலுங்கு படம் ஒன்றின் ஷூட்டிங்கில் இன்னும் ஓரிரு நாளில் கலந்துகொள்ள இருக்கிறார். சீனியர் நடிகர்தான் ஹீரோ.

அது வேற, இது வேற

அது வேற, இது வேற

இதில், ஹீரோவுடன் சில நெருக்கமான காட்சிகளும் இருக்கிறதாம். பொதுவாகவே தெலுங்கு படங்களில் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதனால் அதை வேறு மாதிரி சொல்லி இருக்கிறார்கள், அந்த நடிகையிடம். அதுபற்றி ஒன்னுமில்ல, தாராளமாக நடிக்கிறேன். நடிப்பு வேற, தனிப்பட்ட வாழ்க்கை வேற என்று கூறியிருக்கிறாராம், நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X