'சிங்கிளா இருந்தா மட்டும் சொல்லுங்க..' கறார் காட்டிய பிரபல ஹீரோயின்.. கப்சிப் ஆன இயக்கம்!

By

சென்னை: இரண்டு ஹீரோயின் கதையில் நடிக்க மாட்டேன் என்று ஆவேசமாக மறுத்திருக்கிறார் பிரபல ஹீரோயின்.

தமிழில் அந்த ஹீரோயின் நடித்து இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.

பிரபல ஹீரோவுடன் அவர் தமிழில் நடித்துள்ள அந்த படம், பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்கிறார்கள்.

ரவுண்ட் வருவார்

ரவுண்ட் வருவார்

அந்தப் படம் வெளியானால், தமிழில் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள், சினிமாகாரர்கள். அதன் ரிலீசைதான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அந்த ஹீரோயினும். அடுத்து பிரபல ஹீரோ படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.

சாண்டல்வுட் ஹீரோயின்

சாண்டல்வுட் ஹீரோயின்

இதற்கிடையே, மேலும் சில டாப் ஹீரோ படங்களுக்கு அவருடன் பேசி வருகின்றனர். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் என்பதால் லக்கி ஹீரோயின் என்கிறார்கள் அவரை. சாண்டல்வுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு வந்த அவர், இப்போது சில பெரிய ஹீரோ படங்களில் நடித்து வருகிறார், அங்கு.

ஹீரோவின் மகன்

ஹீரோவின் மகன்

இதனால் அங்கு அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் பட்டியலில் இவரும் சேர்ந்திருக்கிறார். ஒன்றரை கோடி சம்பளம் என்கிறார்கள். மூன்று மொழிகளில் உருவாகும் படம் ஒன்றுக்காக சமீபத்தில் அவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறது படக்குழு. அதில் ஹீரோவாக பிரபல ஹீரோவின் மகன் நடிக்கிறார்.

சிங்கிள் ஹீரோயின்

சிங்கிள் ஹீரோயின்

முதலில் நடிக்கிறேன் என்றவர், பிறகு இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றதும் ஒரேடியாக மறுத்துவிட்டாராம். வேண்டாம், சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட்னா மட்டும் பேசுங்க என்று சொல்லிவிட்டாராம். இதனால், அந்த ராசியான கண்ணா நடிகை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

ரசிகர்கள் கவனம்

ரசிகர்கள் கவனம்

இரண்டு ஹீரோயின்கள் கதை என்றால், முக்கியத்துவம் இருக்காது என்பதும் ஒரு ஹீரோயின் என்றால்தான் தன் மீது ரசிகர்கள் கவனம் இருக்கும் என நினைக்கிறாராம், நடிகை. அதனால்தான் அவசரமாக அந்த படத்தை மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இயக்குனர் கப்சிப் ஆகிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X