ஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா..? அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்!

By

சென்னை: தனக்கு வந்த, அந்த பயோபிக் வாய்ப்பை அவசரமாக மறுத்திருக்கிறார் பிரபல ஹீரோயின்.

சினிமாவில் இப்போது வாழ்க்கை வரலாறுகளை படமாக எடுப்பது அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே எடுக்கப்பட்டு வெளியான பல பயோபிக் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பதால் இப்படி.

முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர்

அந்தப் பழம்பெரும் ஹீரோயின் படம் ஹிட்டானதை அடுத்து மேலும் சில பழம்பெரும் நடிகைகளின் பயோபிக் படங்கள் உருவாக இருக்கிறது. முன்னாள் முதல்வரின் பயோபிக்கும் படமாக்கப்பட்டு வருகிறது. அதில் அந்த இந்தி நடிகை நடித்து வருகிறார். அதே முன்னாள் முதல்வரை பற்றி உருவாகும் இன்னொரு படத்தில், மேனன் நடிகை நடிக்கிறார்.

வீணாகி விட்டது

வீணாகி விட்டது

இந்தி நடிகை நடிக்கும் படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்குப் பிறகு தொடங்க இருக்கிறது. இந்த லாக்டவுனால், அந்தப் படத்துக்காகப் போடப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் செட் வீணாகிவிட்டது. இதனால் பல கோடி நஷ்டம். ஏற்கனவே லாக்டவுனால் நஷ்டமடைந்திருக்கும் தயாரிப்பாளருக்கு இந்த நஷ்டம் எக்ஸ்ட்ரா அழுத்ததைக் கொடுத்திருக்கிறது.

தகவல் இல்லை

தகவல் இல்லை

இதற்கிடையே மேனன் நடிகை நடிக்கும் பயோபிக் படத்தின் நிலை பற்றி தகவல் இல்லை. இந்நிலையில், விளையாட்டு வீராங்கனை ஒருவரின் பயோபிக் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது சமீபத்தில். தமிழ் உட்பட மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க, பல டாப் ஹீரோயின்கள் ஆலோசிக்கப்பட்டு, அந்த மேனன் நடிகை பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தார்களாம்.

யோசித்து சொல்கிறேன்

யோசித்து சொல்கிறேன்

இதையடுத்து நடிகையிடம் பேசியிருக்கிறார்கள், தயாரிப்புத் தரப்பில். விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகை, முதலில் யோசித்து சொல்கிறேன் என்றாராம். பிறகு, நோ சொல்லிவிட்டார் என்கிறார்கள் டோலிவுட்டில். காரணம் ஏதும் சொல்லவில்லை நடிகை. ஆனால், இதுதான் காரணம் என்கிறார்கள், டோலிவுட்டில்.

பயோபிக்

பயோபிக்

அதாவது, படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்களாம். அது கஷ்டம் என்பதாலும் ஏற்கனவே ஒரு பயோபிக்கில் நடித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு பயோபிக் படம் வேண்டாம் என்று நடிகை முடிவு செய்ததாலும், நோ சொன்னாராம். இதையடுத்து மூணுஷா, நம்பர் நடிகை உள்ளிட்ட சிலரிடம் பேசி வருகிறதாம் தயாரிப்பு தரப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X