'அதுவும் சரியில்ல, இதுவும் அமையலை..' நோ சொன்ன அந்த வாரிசு ஹீரோயின்.. அப்செட் ஆன பிரபல இயக்கம்!
சென்னை: எதிர்பார்த்த அந்த ஹீரோயின், நோ சொன்னதால் பிரபல இயக்கம் அப்செட் ஆகி இருக்கிறார்.
Recommended Video
அந்த இயக்குனர் டிடெக்டிவ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். படத்தின் ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் மோதல்.
ஹீரோதான் தயாரிப்பாளர் என்பதால், இருவருக்கும் பட்ஜெட் தொடர்பாக உரசல் அதிகரிக்க, விலகினார் இயக்கம், நீக்கினார் ஹீரோ.

ஹீரோ வேண்டாம்
இதையடுத்து தனது அடுத்த படத்தை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறி இருந்தார், அந்த இயக்குனர். அதன்படி அதிரடியாக வேறு சில ஹீரோக்களை தேடி கதைச் சொன்னார். அதில் அந்த சர்ச்சை ஹீரோ ஓகே ஆனார். அடுத்தக் கட்டமாகத் தயாரிப்பாளரைத் தேடினார். இயக்குனர் மீதும் அவர் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் சிலர், அந்த ஹீரோ மட்டும் வேண்டாம் என்றார்களாம் இயக்குனரிடம்.

முன்வரவில்லை
பிறகு வேறு சிலர் தயாரிப்பாளர்களையும் பார்க்க, அவர்களும் அதையே சொல்லி இருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளர், சில ஹீரோக்களின் பெயரையும் சிபாரிசு செய்து, இவங்களை வச்சு பண்றீங்களா? என்றும் கேட்டிருந்தார். அதற்குள் கொரோனா வந்து சினிமாவை மொத்தமாக முடக்கி விட, இயக்கம் சொல்லும் பட்ஜெட்டுக்கு அந்தப் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லையாம்.

ஹாரர் கதை
இதனால் அந்த கதையை அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, சின்ன பட்ஜெட்டில் எளிமையான ஒரு ஹாரார் கதையை படமாக்கத் திட்டமிட்டார். அதற்காக, வழக்கம் போல ஆங்கில படம் ஒன்றை அப்படியே தழுவி ஒரு படத்தை உருவாக்கி இருந்தாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என்பதால் பிரபல ஹீரோயினை நாயகியாக்க முடிவு செய்திருந்தார்.

நோ சொல்லிவிட்டார்
அதன்படி, அந்த பிரபல வாரிசு நடிகையிடம் பேசி இருந்தாராம் இயக்கம். தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்ட் கட்டும் அந்த வாரிசு நடிகை நடித்தால் மற்ற மொழிகளிலும் பிசினஸ் பண்ணலாம் என்கிற ஐடியாவும் இருந்ததாம். ஆனால், முதலில் யோசித்த அந்த வாரிசு நடிகை, பிறகு என்ன காரணத்தாலோ நோ சொல்லிவிட்டார் என்கிறார்கள். இதனால் இயக்கம் அப்செட் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











