அந்த ஹீரோ கன்ட்ரோல்ல இல்லையாமே ஹீரோயின்.. இப்பலாம் அவர் பத்தி மூச்சு விடறதில்லையாம்..ஏன் இப்படி?

By

சென்னை: அந்த ஹீரோயின் இப்போது அந்த ஹீரோவின் கன்ட்ரோலில் இல்லை என்று சொல்கிறார்கள், சினிமா வட்டாரத்தில்.

தமிழில் அந்த ஹீரோயின் நடித்து நேரடியாக ஒரு படமும் வெளியாகவில்லை. தெலுங்கில் இருந்து இறக்குமதியான படம் வந்திருக்கிறது.

அடுத்து தம்பி நடிகருடன் நடித்திருக்கிறார், ஒரு படத்தில். அதுவும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் தமிழில் சில டாப் ஹீரோ படங்களுக்கு அவரை பேசி வருகின்றனர்.

சோதனை

சோதனை

தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார், அந்த நடிகை. பெரும்பாலான படங்கள் ஹிட்டடிக்க, இப்போது அவர் ராசியான ஹீரோயின் ஆகியிருக்கிறார் அங்கே. இதனால் தனது சம்பளத்தை திடீரென்று உயர்த்தினார். இப்போதும் சில டாப் ஹீரோ படங்களில் நடிக்க வந்திருக்கிறது வாய்ப்பு. அடுத்த படத்துக்காக ஹோம் ஒர்க்கில் இருக்கிறார் நடிகை.

நெருக்கமாக

நெருக்கமாக

கன்னட சினிமாவில் இருந்து தெலுங்குக்கு வந்த அவர், அந்த இளம் ஹீரோவுடன் நெருக்கமாக இருந்தாராம். தொடர்ந்து இரண்டு படங்களில் அவருடன் நடித்த நடிகை, அவரை காதலிப்பதாகக் கூட அப்போது கிசுகிசுக்கள் உலா வந்தன. அவர் பற்றி பேசுவதையும் கொடுக்கிற பேட்டிகளில் அவரை பற்றி எதையாவது சொல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

மார்க்கெட் ஏறியது

மார்க்கெட் ஏறியது

ஒரு கட்டத்தில் நடிகருக்கு படங்கள் அடி வாங்க, இவருக்கு மார்க்கெட் ஏறிவிட்டது.
இதனால், அந்த ஹீரோவின் கன்ட்ரோலில் இருந்து விலகிவிட்டாராம் நடிகை. இப்போது அவரை பற்றி ஒரு வார்த்தை சொல்லக் கூட பயப்படுகிறாராம். அவர் பற்றி எந்த மீடியாவது கேள்விகேட்டால், வேற எதையாவது பேசுவோமே என்று திசை திருப்பி விடுகிறாராம். நடிகையின் இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று ஆராய்கிறது டோலிவுட்.

மீண்டும் ஹாய்

மீண்டும் ஹாய்

இவர், ஏற்கனவே ஹீரோ ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை நிறுத்தியவர். அதனால் அவருக்கு, எங்கே பிடித்தால், எங்கே செல்லலாம் என்பது தெரியும் என்கிறார்கள். இப்போதைக்கு அவர் தோல்வி பட ஹீரோ என்பதால் கட் பண்ணிவிட்டாராம். அடுத்து அவர் ஒரு ஹிட் கொடுத்தால், நடிகை மீண்டும் ஹாய் சொல்வார் என்கிறார்கள்.
சினிமால இதெல்லாம் சகஜமப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X