Just In
- 12 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 12 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 12 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 12 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க!
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'ஓவர் ஸ்கின் ஷோவும் ஒர்க் அவுட் ஆகலையே..' அதிக வருத்தத்தில் அப்படியாகிவிட்ட திறமையான ஹீரோயின்!
சென்னை: கிளாமருக்கு இறங்கியும் வாய்ப்புகளை பெற முடியாததால், அந்த ஹீரோயின் வருத்தத்தில் இருக்கிறாராம்.
சினிமாவில், சிறப்பாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு கூட வாய்ப்புகள் கிடைக்காமல் போவது சகஜம். திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போன நடிகைகள் ஏராளம்.
அதே நேரம் தலைகீழாகவும் நடக்கும். திறமை இல்லாத நடிகைகளுக்கு திடீரென்று வாய்ப்புகள் அதிகமாக டோரை தட்டும்.

சுத்தமாக வாய்ப்பில்லை
இது எப்படி என்பது நமக்குத் தெரியாத விஷயம். அந்த நடிகையும் அப்படித்தான். ஆக்ஷன் நடிகரின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் அவர். சிறப்பாக நடிப்பார் என்பதை முதல் படத்திலேயே வெளிகாட்டினார். ஒரு சில படங்களில் இங்கு நடித்துவிட்டு, தெலுங்குக்கு போனார். பிறகு இங்கு சுத்தமாக வாய்ப்பில்லாமல் போனது. இதனால், கிடைத்த ஒன்றிரண்டு படங்களில் நடித்து வந்தார்.

நடிப்புக்கு பாராட்டுகள்
இந்நிலையில்தான் நடிப்புக்குத் தீனிபோடும் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் கிடைத்தது, பீரியட் படம். நடிகை அப்படியே பழங்கால ஸ்டைல் பெண்ணாக, அந்த கேரக்டராகவே மாறியிருந்தார். படத்துக்கும் அவர் நடிப்புக்கும் பாராட்டுகள் மட்டுமே கிடைக்க, படம் கமர்சியலாக ஹிட்டாகவில்லை.

இந்திக்கு போனார்
இதையடுத்து கிடைத்த தமிழ் வாய்ப்பும் ஒரு பீரியட் படம்தான். நடிப்பில் மிரட்டி இருந்தார் நடிகை. அதிலும் அப்படித்தான். நடிகைக்கும் படத்துக்கும் பாராட்டு கிடைக்க, வசூல் ரீதியாக படத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்திக்கும் போனார். அவர் நடித்த படம் ஓடவில்லை. எங்க போனாலும் தடங்கலாக இருக்கே என்று கோயில்களுக்கு ரவுண்ட் அடித்துப் பார்த்தார்.

கிளாமர் போட்டோஷூட்
பின்னர் வழக்கம் போல, வாய்ப்பில்லாத ஹீரோயின்கள் செய்யும் வேலையை செய்தார். அதாவது, கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். கொஞ்சம் ஓவர் கிளாமராகவே அந்த போட்டோஸ் இருந்தன. இருந்தும் நடிகைக்கு வாய்ப்பு வரவில்லை. தமிழில் ஒரே ஒரு படம் மட்டுமே கைவசம் இருக்கிறது. 'இவ்வளவு இறங்கியாச்சு, வேற என்ன செய்யலாம்?' என்று யோசித்து யோசித்து, இப்போது மதுவுக்கு அடிமையாகி விட்டதாகச் சொல்கிறார்கள்.