வீதிக்கு வந்த மோதல்.. அந்த மாஸ் ஹீரோவுக்கும் அப்பாவுக்கும் இப்படியொரு பிரச்னையாமே!

By

சென்னை: அரசியல் கட்சி விவகாரத்தில், அப்பா மகன் சண்டை பொதுவெளிக்கு வந்திருக்கிறது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

மகனின் மக்கள் இயக்கம் பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்திருக்கிறார், மாஸ் ஹீரோவின் அப்பா.

அதிர்ச்சி அடைந்த மாஸ் ஹீரோ, உடனடியாக அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

எதிர்காலத்துக்காக

எதிர்காலத்துக்காக

'நான் தான் ஹீரோவின் முதல் ரசிகன். நான் தொடங்கிய ரசிகர் மன்றம் பிறகு நற்பணி இயக்கமாகவும் மக்கள் இயக்கமாகவும் மாற்றப்பட்டது. இப்போது இதில் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். பணியாற்றுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்துக்காக இதை தொடங்கி இருக்கிறேன்' என்றார் அப்பார்.

தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

அதில், தனக்கும் அந்த அரசியல் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்றும் தனது ரசிகர்கள் அதில் இணைய வேண்டாம் என்றும் அந்தக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என்றும் அதற்கும் நமது இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பரபரப்பாகக் கூறியிருக்கிறார் மாஸ் ஹீரோ.

நகர்த்தி வந்தார்

நகர்த்தி வந்தார்

இது பல வருட புகைச்சல் என்கிறார்கள் கோலிவுட்டில். தன் மகனான மாஸ் ஹீரோவை எப்படியும் அரசியலுக்கு கொண்டு வர ஆசை, அப்பாவுக்கு. இதற்காக ஆரம்பகாலத்தில் இருந்து காய் நகர்த்தி வந்தார், அப்பா. ஒவ்வொரு பட ரிலீஸுன் போது அதற்கான வேலைகளை செய்து வந்தார்.

இம்சையாக இருந்தது

இம்சையாக இருந்தது

பிடிகொடுக்கவில்லை மகன். அரசியலுக்கு இப்போதே வருவது சரியாக இருக்காது என்று நினைக்கிறார் அவர். ஆனால், பிடிவாத அப்பாவின் பேச்சால், ஒவ்வொரு பட ரிலீஸின் போதும், பல பிரச்னைகள் சந்தித்தார் ஹீரோ. அது அவருக்கு பெரிய இம்சையாகவே இருந்தது.

தனி தனி வீட்டில்

தனி தனி வீட்டில்

பல வருடங்களாகவே பேச்சில்லையாம் இருவருக்கும். தனி தனி வீட்டில் வசித்து வருகிறார்கள். சினிமா விழாக்களில் ஒன்றாக கலந்துகொண்டாலும் அப்பாவுக்கும் மகனுக்குமான பனிப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மோதல் அதிகரிப்பு

மோதல் அதிகரிப்பு

இந்த போர், இந்த அரசியல் கட்சி விவகாரத்தில் ஆக்ரோஷமாக வெளிப்பட்டு இருக்கிறது. இதற்கும் தன் மகனுக்கும் சம்பந்தமில்லை என்று அப்பா சொன்னாலும் அதில் மகன் பெயர் இருப்பதால் மோதல் அதிகரித்து இருக்கிறதாம். இருவருக்கும் பொதுவான குடும்ப நண்பர் மூலம் அப்பாவுக்கும் மகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X