twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா?

    By Siva
    |

    சென்னை: நண்பனின் படத்திற்கு விளம்பரம் தேடத் தான் இயக்குனர் ஒருவர் பலாத்காரம் பற்றி பேசியதாக விமர்சனம் எழுந்துள்ளது.

    அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து இரண்டெழுத்து இயக்குனர் ஒரு படத்தை எடுத்துள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான கண்ணாடிக்காரர் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழ் நடிகர்கள் எல்லாம் ஓவர் ஆக்டிங் செய்பவர்கள் என்பது போன்று தரக்குறைவாக பேசினார்.

    அண்டை மாநிலம்

    அண்டை மாநிலம்

    படத்தின் ஹீரோவான அண்டை மாநில நடிகரை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார் அந்த கண்ணாடிக்கார். மேலும் நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அந்த நடிகரை பலாத்காரம் செய்திருப்பேன் என்றும் கூறினார்.

    படம்

    படம்

    எப்படியாவது ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டால் தான் இந்த படம் பெருசா ஓடும். அதை நான் செய்துவிட்டேன் என்று கூறினார் கண்ணாடிக்காரர். அவரின் பேச்சை கேட்டு தமிழ் நடிகர்களும், மக்களும் கோபம் அடைந்துள்ளனர்.

    அருவெறுப்பு

    அருவெறுப்பு

    ஒரு நடிகரை புகழ வேண்டுமானால் பலாத்காரம் செய்தால் தான் முடியுமா?, பலாத்காரம் என்பது அவ்வளவு கேலிப் பேச்சாகிவிட்டதா. அவர் பெருமையாக பேசியதை கேட்டு கைதட்டியவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.

    விளம்பரம்

    விளம்பரம்

    பலாத்காரம் பற்றி பேசி நண்பனின் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளார் கண்ணாடிக்காரர். இப்படி சீப் பப்ளிசிட்டி செய்து தான் அந்த படத்தை ஓட வைக்க வேண்டுமா? தந்தை-மகள் பாசத்தை திரையில் காட்டுவதில் அந்த இரண்டெழுத்து இயக்குனர் வல்லவர் என்பது மக்களுக்கு தெரியுமே. அப்படி இருக்கும்போது இந்த கேவலமான விளம்பரம் தேவையா?

    English summary
    A director's speech at an audio launch function hasn't gone down well with the film industry people and commoners.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X