முதல்லயே தெரியாம பேச்சே..! அவுட்டோர் ஷூட்டிங்கில் அது கிடைக்காமல் அவஸ்தைப்பட்ட அந்த பேய் பட டீம்!

By

சென்னை: படப்பிடிப்புக்குப் போன இடத்தில், அந்த விஷயம் கிடைக்காமல் படக்குழுப் பட்ட அவஸ்தையை, கோடம்பாகத்தில் சிரிக்காமல் சொல்கிறார்கள், சிரிப்பாக!

அந்த காமெடி பட இன்ஷியல் இயக்குனர், தனது காமெடி ரூட்டுக்கே மீண்டும் திரும்பி இருக்கிறார், இப்போது.

அவர் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான பேலஸ் படம், கன்னாபின்னா ஹிட்.

பேயும் காமெடியும்

பேயும் காமெடியும்

அது பேய் பட சீசன் என்றதால், பேயும் காமெடியும் படத்தை மெகா ஹிட்டாக்கின. அதில் பாடகி நடிகை, மும்பை நடிகை, ராய் நடிகை, அந்த சாண்டல் காமெடி, கோவை காமெடி என படம் வேற லெவலில் இருந்தது. இதையடுத்து, அந்தப் படத்தின் அடுத்த பாகத்தையும் சில நடிகர்களை மட்டும் மாற்றிவிட்டு இயக்கினார். இது முந்தைய பட அளவுக்கு ஓடவில்லை என்றாலும் ஓரளவு வசூலைப் பெற்றுத் தந்தது.

சண்டை படம்

சண்டை படம்

இதையடுத்து சில காமெடி படங்களை இயக்கிய அந்த இயக்குனர், அந்த உசர நடிகரை வைத்து சண்டை படத்தை இயக்கி இருந்தார், சமீபத்தில். இந்தப் படம் அட்டர் பிளாப் வகையில் இடம்பிடித்தது. சுமார் 45 கோடி ரூபாய் மொத்தமாக மாயமாகிவிட, அடுத்துதான் தனது பழைய காமெடி ரூட்டுக்குத் திரும்பி இருக்கிறார் இயக்குனர்.

நிஜ பேலஸ்

நிஜ பேலஸ்

அந்த காமெடி படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கிறார், இப்போது. கதை அந்த லைன்தானாம். ஆனால், முந்தைய படங்களில் நடித்த நடிகைகளையும் லேட்டஸ்ட் நாயகிகளையும் நடிக்க வைத்து இயக்குகிறார், இந்தப் படத்தை. முந்தைய படங்களில் பேலஸை செட் போட்டு படமாக்கி இருந்தனர். இதில் நிஜ பேலஸ் ஒன்றிலேயே படமாக்க முடிவு செய்தனர். அதன்படி, வட மாநிலம் ஒன்றில் உள்ள நிஜ பேலஸில் நடந்து ஷூட்டிங்.

இல்லாமல் முடியாது

இல்லாமல் முடியாது

முதல் நாள் படப்பிடிப்பு ஜாலியாக முடிய, இரவுதான் தெரிய வந்ததாம், அந்த மாநிலத்தில் சரக்கு கிடைக்காது என்பது. பெரும்பாலான சினிமா காரர்களுக்கு அது இல்லாமல் முடியாது. இந்த இடத்தில் இப்படிச் சிக்கிக்கொள்ள, அங்கு தவியாய் தவித்ததாம் படக்குழு. 25 நாள் ஷூட் முடிந்து நாளைதான் திரும்புகிறது பேய் பட டீம்! சென்னைத் திரும்பியதும் மொத்தமாக குடிப்பார்களோ, என்னமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X