twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பளத்தை குறைக்கச் சொன்ன தயாரிப்பு..ஓகே சொன்ன இயக்கம்..காத்திருக்கும் அக்ரிமென்ட்..கப்சிப் ஹீரோ!

    By
    |

    சென்னை: கொரோனா காரணமாக தயாரிப்பு தரப்பில் அந்த டாப் ஹீரோவின் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்டுள்ளனர்.

    அந்த டாப் ஹீரோ, வாத்தியாராக நடித்திருக்கிறார், அடுத்த படத்தில். இளம் இயக்குனர் இயக்கி இருக்கிறார்.

    படத்துக்கு கன்னாபின்னா எதிர்பார்ப்பு இருப்பதால், பிசினஸ் அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!

    படப்பிடிப்புகள்

    படப்பிடிப்புகள்

    ஆனால், மொத்தமாகக் குதறிப் போட்டுவிட்டது கொரொனா வைரஸ். லாக்டவுனால், படப்பிடிப்பு, ரிலீஸ் தேதி என்று எல்லாம் குழப்ப குளறுபடியில் சிக்கிக்கொள்ள, தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். இந்நிலையில் அந்த டாப் ஹீரோவின் படத்துக்கு கொடுத்திருந்த அட்வான்சை திருப்பிக் கேட்கத் தொடங்கினார்கள், வினியோகஸ்தார்கள்.

    இணை தயாரிப்பாளர்

    இணை தயாரிப்பாளர்

    அவர்களுக்கு, அந்த ஹீரோ நம்பிக்கைக் கொடுத்திருப்பதால், அந்தப் பிரச்னை இப்போதைக்கு முடிந்திருக்கிறது. இதற்கிடையே மொத்தப் படத்தையும் ரூ.175 கோடிக்கு வாங்கி விட்டாராம், அந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர். படம் கண்டிப்பாக நஷ்டமடையும் என்று தெரிந்தே வாங்கி இருக்கிறார் என்கிறார்கள்.

    உத்தரவாதம்

    உத்தரவாதம்

    அதனால் அவருக்கு அந்த ஹீரோ மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பார் என்கிறது கோலிவுட். ஆனால், ஹீரோ தரப்பில் இருந்து எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இதற்கிடையே அந்த ஹீரோவின் அடுத்தப் படத்தை பிரபல நிறுவனம் தயாரிக்கிறது. 'கன்' படத்தின் 2 ஆம் பாகம் என்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கியவரே இதையும் இயக்குகிறார் .

    சம்பளக் குறைப்பு

    சம்பளக் குறைப்பு

    கொரோனா காரணமாக, அந்தப் படத்தை தயாரிக்கும் நிறுவனம் ஹீரோவிடம் சம்பளத்தை குறைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறது. ஹீரோவின் சம்பளம் 80 சி-யாம். இதில் பத்து, இருபது 'சி'-க்களை குறைக்கச் சொல்கிறதாம். அந்த இயக்குனர், தான் வாங்கும் சி-க்களில் இருந்து 10 சி-யை குறைத்துக் கொண்டாராம். இதனால் ஹீரோவும் குறைக்க வேண்டும் என்கிறதாம் அந்த தயாரிப்பு நிறுவனம்.

    எதையாவது சொல்லி

    எதையாவது சொல்லி

    ஆனால், ஹீரோ தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்கிறார்கள். ஒரு முறை குறைக்க ஆரம்பித்தால், பிறகு ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லி குறைக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறாராம் ஹீரோ. அதனால், என்ன செய்வது என்று அமைதியாக இருந்து வருகிறாராம், டாப் ஹீரோ. இந்த கப்சிப்-பால் அக்ரிமென்ட் முடியாமல் இருக்கிறதாம்.

    English summary
    That top production house asking to the top hero to reduce his salary. but the hero didn't reply yet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X